சுதர்ஷன் மகனின் தவறை சிறிதாக்க சொன்னாரோ என்னவோ, ஆனால் கிருத்திகாவின் முகம் ஸ்விட்ச் தட்டியதும் ஒளிரும் விளக்கை போல பளிச்சென்று மலர்ந்தது!!!
அவளின் மனதில் இருந்த குழப்பத்திற்கு பதில் கிடைத்து விட்டதாக அவளுக்கு தோன்றியது!
“ஓகே, கீர்த்ஸ். நைஸ் மீட்டிங் யூ. டைம் கிடைக்கும் போது ஆஃபிஸ் வா. அது பழைய மெமரிஸ் கொண்டு வர கட்டாயம் உதவும். மீன்வைல் டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த்!”
“ஷுயர் சார். சீக்கிரமே வர ட்ரை செய்றேன். எனக்கும் என்னோட பழைய மெமரீஸ் சீக்கிரம் வந்தா நல்லா இருக்கும்னு தோணுது!”
“டேக் கேர்,” என்று சொல்லி, அவர்கள் இருவரும் காரில் ஏறி கிளம்பி சென்றனர்!
அவர்கள் அங்கிருந்த சென்று சில வினாடிகள் ஆனப் பின்பும் கிருத்திகாவின் மனம் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது!!!
சில பல வினாடிகளுக்குப் பிறகே அருகே இருந்த கீதாவின் நினைவு வரவும்,
“என்ன அண்ணி கப் சிப்புன்னு இருக்கீங்க?” எனக் கேட்டாள்.
“நிஜமாவே உங்களுக்கு அம்னீஷியாவா??? இல்லை அப்படி நடிக்கிறீங்களா???” என்றாள் கீதா கண்களை உருட்டிக் கொண்டே!
கிருத்திகாவிற்கு சிரிப்பு வந்தது, சிரிப்பின் ஊடே, “என்ன உங்களுக்கு திடீர்னு இப்படி ஒரு சந்தேகம்?“ என்றும் வினவினாள்!
“கொஞ்சம் முன்னாடி அந்த கார்த்திக் கிட்ட பேசினீங்க பாருங்க, அப்படியே பழைய டெரர் கிருத்திகா பார்த்த மாதிரியே இருந்தது!!! அதான் ஒருவேளை குட் கேர்ளா நடிக்குறீங்களான்னு சந்தேகம் வந்திருச்சு!“