(Reading time: 19 - 38 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 14 - சசிரேகா

   

ருண் தன்னை பற்றி பெருமையாக நினைத்திருந்தான், தான் பேசிய பேச்சிற்கே ஹரிணி மனம் இறங்கியிருப்பாள், அவளுடன் மகிழ்வுடன் வாழலாம் என்ற நினைப்பில் அவளை நெருங்க அவளோ அவனை வெறுப்பேற்றுவது போல நடந்துக் கொண்டாள், அவனைக் கண்டால் இளப்பமாக சிரிப்பது, ஏதாவது பேச வந்தால் சலித்துக் கொண்டு நகர்ந்து சென்றுவிடுவது, அவனை ஏதோ வேண்டா வெறுப்பாகவே நடத்தினாள். அவனும் அதை பொறுத்துக் கொண்டான், எல்லாம் ஒரு நாள் மாறும் என நம்பினான் ஆனால் ஹரிணியோ அவனை இன்னும் வெறுப்பேற்ற எண்ணி வேலை முடிந்தும் வீடு திரும்பாமல் தன் தோழியின் வீட்டில் தங்கினாள். இரவு வந்தும் ஹரிணி வராமல் போக கடுப்பானான், அதற்காகவே ஆபிசுக்கு சென்று பார்த்தான், அங்கு அவள் இல்லை என தெரியவரவே குழம்பினான், அவளுக்கு போன் செய்தான் 

   

”ஹலோ”

   

”ஹலோ ஹரிணி எங்க இருக்க நீ“

   

“எங்கிருந்தா உனக்கென்ன“

   

”விளையாடாத இவ்ளோ நேரம் ஆயிடுச்சி வீட்டுக்கு வராம ஆபிசுலயும் இல்லாம எங்கதான் இருக்க“

   

”ஓ என்னைத் தேடி ஆபிஸ் வரைக்கும் வந்துட்டியா அவ்ளோ சந்தேகமா என் மேல“

   

”சே சே நான் உன் மேல சந்தேகப்படலை, உன்மேல அக்கறையா இருக்கேன், உனக்கு ஏதாவது நடந்தா என்னாகிறது“

   

”அடேங்கப்பா என் மேல என்ன ஒரு அக்கறை”

   

”நக்கலடிக்காத எங்க இருந்தாலும் சரி, உடனே வீட்டுக்கு வா“

   

”வந்து என்ன செய்யப் போறேன்“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.