”தருண் எனக்கு வாழவே பிடிக்கலை, என்னால இப்படி இறுக்கமான வாழ்க்கையை வாழ முடியலை, எதுக்கெடுத்தாலும் நீ என்னை சந்தேகப்படற, நான் நல்லவ உன்னை விட்டு போக மாட்டேன் ஆனா, நீ நான் யார்கூட பேசினாலும் சந்தேகப்பட்டு என்னை திட்டற, அடிக்கற, என்னை நம்பு தருண், உன்னை விட்டு நான் போக மாட்டேன்“
”நீ சொன்னா அதை நான் நம்பனுமா, என் குறை உனக்கு தெரியறவரைக்கும் நான் உனக்கு கணவனா கண்கண்ட தெய்வமா தெரிஞ்சேன் ஆனா, இப்ப நான் உனக்கு இளப்பமா தெரியறேன்ல, யாருகிட்டேயும் என் குறையை சொல்ல முடியாது, அதை பயன்படுத்திக்கிட்டு நீ கண்டவன்கூட ஜாலியா ஊர் சுத்துவ, என்ஜாய் பண்ணுவ கடைசியில எவன்மூலமாவது நீ கர்ப்பமானா ஊரே அது என்னோட குழந்தைன்னுதான் பேசும், அப்ப பார்த்து எனக்கு ஆண்மையில்லைன்னு என்னால வெளிய சொல்ல முடியாது, இதை சாக்கா வைச்சித்தானே இப்படி பொறுக்கித்தனமா நீ நடந்துக்கற”
”சே சே இல்லை தருண், என் மேல சத்தியமா சொல்றேன் நீங்க நினைக்கற மாதிரி நான் நினைக்கலை நான் அப்படிப்பட்டவளா சொல்லுங்க, உங்க குறையை நினைச்சி எனக்கு வருத்தம் இருந்தாலும் அதுக்காக உங்களை விட்டுட்டு இன்னொருத்தனோட தப்பான உறவு வைச்சிக்கற அளவுக்கு நான் போக மாட்டேன், நான் உங்க மனைவி உங்களுக்கு மட்டும்தான் நான் உண்மையா இருப்பேன்”
”இதை நான் நம்பனுமா“
”நம்புங்க தருண், நீங்க நம்பனும்னா நான் என்ன செய்யனும்”
”ம்ம் நீ வேலைக்கு போனது போதும் வீட்ல இரு”
”அவ்ளோதானே சரி, இப்பவே வேலையை விட்டுடறேன் போதுமா”
”போதும் இருந்தாலும்”