(Reading time: 19 - 38 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

எல்லாருக்கும் தெரிஞ்சா உன் நிலைமை என்னாகும் சொல்லு, நான் ஆம்பளம்மா என்னை பத்தி எல்லாரும் கேலி செய்தாலும் நான் கண்டுக்க மாட்டேன் ஆனா, உன்னைப் பத்தி கேவலமா பேசி வைப்பாங்களே அப்ப என்ன செய்வ“

   

”நான் நடத்தை கெட்டவளா யார் சொன்னா அப்படி, நான் ஒழுக்கமாதான் இருக்கேன்“

   

“வீட்டுக்கு வராம எவனோ ஒரு ப்ரண்ட் கூட நைட்டெல்லாம் இருந்துட்டு அடுத்த நாள் வீட்டுக்கு வந்த நீயா ஒழுக்கமானவ”

   

”ஏய் வார்த்தையை அடக்கிப் பேசு”

   

”ஓ உண்மையை சொன்னா கோபம் வருதா“

   

”தருண் போதும் என்னோட ஒழுக்கத்தை பத்தி குறை சொல்ல உனக்குத் தகுதியில்லை“

   

”ப்ச் இப்படி பேசினா எப்படிம்மா, உன்னோட கணவன், நான் உன்னை பத்தி எனக்குத் தெரியாம வேற யாருக்கு தெரியும், எனக்கு குறையிருக்கு அதை வைச்சி நீ கண்டவன்கூட போய் வந்திருப்ப, நாளைக்கே நீ கர்ப்பமானா அது என் குழந்தைன்னு தைரியமா எல்லார்கிட்டயும் சொல்வ, எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி” என்றதும் ஹரிணிக்கு புரிந்துப் போனது

   

”ஓ பவானிக்கு நடந்தது இப்ப நமக்கு நடக்கப் போகுது ம்ம் சரி என்ன சொல்றானோ சொல்லட்டும்” என மனதில் நினைத்தவள் அமைதியாக தன் அறைக்குச் சென்றாள். 

   

தருண் விடவில்லை அவளை தேடிச் சென்றான்.

   

”என்ன ஹரிணி பயப்படறியா இதப்பாரு எனக்கு நீ டைவர்ஸ் கொடுத்துடு, ஏன்னா நாளைக்கே நீ கர்ப்பமாயிட்டா எவனோ ஒருத்தனோட குழந்தைக்கு என்னால அப்பா ஆக முடியாது” என சொல்ல அவளோ

   

”நான் தப்பு செய்யலை நம்பினா நம்பு நம்பாட்டி போ, இளங்கோ இறந்தபின்னாடியே நான் ஒழுக்கமாதான் இருந்தேன், யார்கிட்டயும் போகலை தெரியும்ல“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.