(Reading time: 19 - 38 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

   

”நாளைக்கு டெஸ்ட் முடிஞ்சதும் ரிசல்ட் வரட்டும், அப்ப தெரியும் உன் யோக்யதை குட்நைட் ஹரிணி” என சொல்லிவிட்டு அவன் உறங்க அவளுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது 

   

ஏறக்குறைய இதே நிலைமையில்தான் பவானியும் இருந்தாள், என்ன அவள் ஹரிணி அளவுக்கு தைரியசாலி இல்லை மனம் உடைந்து தவறான முடிவு எடுத்தாள் ஆனால் ஹரிணியோ தருணை பழிவாங்கவே வந்த காரணத்தால் அவளின் மனது இன்னும் உறுதியுடன்தான் இருந்தது.

   

மறுநாள் பொழுது விடிந்ததும் ஹரிணியின் விருப்பமில்லாமல் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு அவனுக்கு நன்றாக தெரிந்த ஒரு க்ளீனிக்குக்கு சென்றான். பலமுறை அங்கு வந்து போன காரணத்தால் டாக்டருக்கு அவனை நன்றாக தெரிந்திருந்தது. ஹரிணியை காட்டி வந்த விசயத்தை சொல்ல டாக்டரும் அவளை பரிசோதிக்கலானார். 

   

ஹரிணியும் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டாள், பரிசோதனை முடிந்ததும் தன் வீடு திரும்பினாள் ஆனால் தருணோ பொறுமையாக இருந்து ரிசல்ட் வாங்கிக் கொண்டு வீடு திரும்பி ஹரிணியிடம் வந்தான்

   

”ரிசல்ட் வந்துடுச்சி ஹரிணி உன்னோட பத்தினித்தனத்தை பார்க்கலாமா” என நக்கலாக பேச அவளோ தைரியமாக இருந்தாள்

   

”நான் எந்த தப்பும் செய்யலை” என்றாள் உறுதியாக அவனோ

   

”அதையும் பார்க்கலாம்” என சொல்லிக் கொண்டே அந்த ரிசல்ட்டை பார்த்து அதிர்வது போல நடித்தான்

   

”அடிப்பாவி எனக்கே துரோகம் இழைச்சிட்டியேடி” என சொல்ல அவளுக்கு திக்கென்றது

   

”என்ன உளர்ற“

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.