”என்ன அந்த வேலை”
“நிவேதினி பத்தினியா இல்லையான்னு நிரூபிக்க அவளை டார்ச்சர் பண்ணான், அவளும் வேறு வழியில்லாம டெஸ்ட்டுக்கு ஒத்துக்கிட்டா அவளை கூட்டிக்கிட்டு என்கிட்ட வந்தான் நிவேதினி நல்ல பொண்ணு உத்தமி ஆனா, டெஸ்ட் ரிசல்ட்ல அவள் களங்கப்பட்ட மாதிரி எழுதனும்னு சொன்னான், இல்லைன்னா என் குழந்தையை கொன்னுடுவேன்னு சொன்னான் அதுல பயந்து நானும் அவன் சொன்ன மாதிரியே ரிசல்ட் எழுதி தந்தேன், அதை வைச்சி நிவேதினியை ரொம்ப கஷ்டப்படுத்திட்டான், அவனோட டார்ச்சர் தாங்க முடியாம பாவம் அந்த பொண்ணு தற்கொலை செய்துக்கிட்டா” என சொல்ல ஹரிணிக்கு திக்கென்றது ஒரு நொடி அந்த உலகமே நின்றது போல ஆனது. தருணின் கேவலமான செயலை நினைத்து கோபம் எழுந்தது
”ஆமா பவானிக்கும் நீங்கதான் டெஸ்ட் ரிசல்ட் தந்தீங்களா“
”ஆமாம் திடீர்ன்னு ஒருநாள் பவானியை கூட்டிட்டு வந்தான் டெஸ்ட் எடு ஆனா, நான் சொல்ற ரிசல்ட்தான் சொல்லனும்னு மிரட்டினான், அவன் சொன்னது போலவே செய்தேன் அதுல பவானி நடத்தை கெட்டவள்ன்னு அவளை தருண் டார்ச்சர் பண்ணான் பாவம் அந்தப் பொண்ணு ரயில்ல பாஞ்சி தற்கொலை செய்துக்கிட்டா”
”ஓஹோ அந்த டெக்னிக்கைதான் இப்ப என் விசயத்தில கொண்டு வரானா ஆக நானும் தற்கொலை செய்துக்கனும்னு ஆசைப்படறானா ஏன் அவனுக்கு வேற பொண்ணு கிடைச்சிடுச்சா என்ன”
”அது தெரியாது”
”வேற என்னதான் தெரியும் உனக்கு”
”அவனை நம்பி நான் மோசம் போயிட்டேன், என் குழந்தை எங்க இருக்குன்னு கூட எனக்குத் தெரியாது, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்” என கேட்க அவளோ ஆழமாக யோசித்தாள் அவளை அழைத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு சென்ற நாள் நினைவுக்கு வந்தது