சொன்னேன்”
“யாரு நான் தப்பு செய்தேன் அதை நீ பார்த்த, உன்கிட்ட இப்படியெல்லாம் பேசினா வேலைக்கு ஆகாது பொம்பளையாச்சேன்னு பொறுமையா பேசினது என் தப்புதான்” என சொல்லிய ஹரிணி உடனே அந்த மருத்துவரின் கன்னத்தில் விட்டாள் ஒரு அறை அதில் மருத்துவர் அரண்டுப் போனார், ஒரு அடியோடு விடாமல் நன்றாகவே கன்னம் பழுக்கும் அளவுக்கு அறை விட்டாள் ஹரிணி அவளின் கையே வலித்தது ஆனாலும் ஓயவில்லை மருத்துவரே ஒரு கட்டத்தில் கைகூப்பி மன்னிப்பு கேட்டு விட அதில் ஹரிணி அமைதியாகி அவரிடம் பேசினாள்
”சொல்லுங்க எதுக்காக பொய்யான ரிசல்ட்டை தந்தீங்க, என்னோட உண்மையான ரிசல்ட் எங்க”
”இதப்பாரு தருணை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும், புருஷன் இல்லாம நான் தனியாளா நின்னப்ப எனக்கு துணையா நின்னான், எனக்கு முழு பாதுகாப்பு தந்தான், நிவேதினியை அவன் கல்யாணம் செய்தபின்னாடி என்னை பார்க்க கூட அவன் வரலை, எனக்கு கஷ்டமா போச்சி, அவனை தேடிப் போனேன், கெஞ்சினேன் ஆனா, அவன் மதிக்கலை ஆனாலும் நான் விடலை அவனால எனக்கு ஒரு குழந்தை பிறந்தது, அதைக் காட்டி அவனை மிரட்டினேன் நிவேதினிக்கு இந்த விசயம் தெரியாது, அவள்கிட்ட சொல்லிடுவேன்னு பயமுறுத்தினேன் ஆனா, அவன் பயந்த மாதிரி நடிச்சான் நிவேதினிக்கு சொல்லாதேன்னு சொல்லி எனக்கு பணம் தந்தான், அந்த குழந்தையை எனக்குத் தெரியாம எங்கயோ தூக்கிட்டு போய்ட்டான், நான் கதறி அழுதேன், குழந்தையை காட்டித்தானே, என்னை மிரட்டற அந்த குழந்தை நல்லபடியா இருக்கனும்னா நான் சொல்றதை கேட்டு நடக்கனும்னு மிரட்டினான்
நானும் குழந்தைக்காக அவன் பேச்சு கேட்டு நடந்தேன், நிவேதினிக்கு எப்படியோ இந்த விசயம் தெரிஞ்சிடுச்சி, அவள் தருணோட சண்டை போட்டா எங்க வெளி உலகத்துக்கு தான் செய்த தப்பு தெரிஞ்சிடுமோன்னு பயந்து ஒரு திட்டம் போட்டான் அதன்படி நிவேதினி மேல பழி போட்டான், அவள் நடத்தையில குறைக் கண்டுபிடிச்சான், சந்தேகப்பட்டு அவளை வாழ விடாம கஷ்டப்படுத்தினான், அவளே போதும் உன்கூட வாழ்ந்தது எனக்கு டைவர்ஸ் கொடுத்துடுன்னு சொன்னா ஆனா, இவன் தரலை எப்படியும் நிவேதினியால தனக்கு சொத்து கிடைக்கும் நம்பினான் அதுக்காக அவளை தன் கைபிடிக்குள்ள கொண்டு வர வைக்கனும்னு நினைச்சி யாருமே செய்யக்கூடாத ஒரு வேலையை செய்தான்”