(Reading time: 19 - 38 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”நீ கர்ப்பமா இருக்கியா இல்லையான்னு நான் தெரிஞ்சிக்கனும், எவன்கூடவாவது நீ உறவு வைச்சிருக்கியான்னு டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம்” என சொல்ல அவளோ அதிர்ந்தாள்.

   

”என்ன ஷாக்காயிட்ட உண்மை உடைபடும்னு பயமா”

   

”ஏன் தருண் இப்படி சந்தேகப்படறீங்க, என் மேல நம்பிக்கையில்லையா உங்களுக்கு”

   

”சத்தியமா இல்லை டெஸ்ட் ரிசல்ட் வரட்டும், அதுல நீ கர்ப்பம் இல்லை உத்தமின்னு வந்தா அப்ப உன்னை நான் நம்பறேன் போதுமா”

   

”உங்களோட சந்தேகத்துக்காகலாம் என்னால டெஸ்ட் எடுக்க முடியாது“

   

”அப்ப ஒத்துக்க நீ நடத்தை கெட்டவள்ன்னு”

   

”தருண் வாயை மூடு” என அவனை அடிக்க வர அவனோ அவளை தடுத்து இறுக்கமாக பிடித்தான்

   

”என்னடி என்னைப் பார்த்தா முட்டாள் போல தெரியுதா, நீ பாட்டுக்கு கண்டபடி ஊர் பொறுக்கிட்டு கர்ப்பமாகி வருவ, உன் குழந்தைக்கு நான் அப்பாவாகனுமா முடியாதுடி”

   

”என்மேல சந்தேகப்படாத தருண், அது உனக்கு நல்லதில்லை“

   

”ஏய் நான் சந்தேகப்படக்கூடாதுன்னா நீ உத்தமின்னு நிரூபி, என்கூட ஆஸ்பிட்டலுக்கு வா” என சொல்ல அந்நேரம் அவளுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை, பவானியும் இதே சங்கடமான நிலைமையில்தான் சிக்கிக் கொண்டாள், இப்போது அதே நிலைமை தனக்கு வரவும் நொந்துப் போனாள்

   

”ஆல்ரைட் வரேன் போதுமா“

   

”குட் கேர்ள்” என சொல்லி அவளை விட்டான், அவளோ தொய்வாக படுக்கையில் அமர்ந்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.