”அப்படியா சரி உன்னோட நேர்மையை சோதிச்சிட வேண்டியதுதான்”
”புரியலை“
”ஒண்ணுமில்லை நாளைக்கு நாம ஆஸ்பிட்டலுக்குப் போகலாம்“
”எதுக்கு”
“நீ கற்போடதான் இருக்கியான்னு டெஸ்ட் எடுத்து பார்க்கலாம்” என இயல்பாகச் சொல்ல பவானிக்கு தலை பாரமானது, கண்கள் இருண்டது, கைகால் நடுங்கியது, உடல் தளர்ந்தது, அவளால் நிற்க கூட இயலவில்லை, பொத்தென கீழே விழுந்தாள் அடுத்த நொடி அதிர்ச்சியில் அவளுக்கு மயக்கமே வந்தது அதுவரையில்தான் டைரியில் இருந்தது நினைவுக்கு வந்தது
”பவானி கடைசியா இதை மட்டும்தான் எழுதியிருக்கா, அதுக்கு அடுத்த நாள்தானே அவள் தற்கொலை செய்துக்கிட்டா, அப்படின்னா என்னவோ நடந்திருக்கனும் பாவி அவளை ரொம்ப காயப்படுத்திட்டான், பவானி வாழ்க்கையில என்னென்ன செய்தானோ அதை அப்படியே என் வாழ்க்கையிலயும் செய்யப் பார்க்கிறான், அப்படின்னா நிச்சயம் ஒரு நாள் எனக்கும் பவானி நிலைமை வரும், என்னையும் சந்தேகப்பட்டு டெஸ்ட் எடுக்கச் சொல்வான், அந்தச் சமயம் அவனை சும்மா விடக்கூடாது, இளங்கோ மரணத்தை பத்தி அவன் சொன்ன உண்மைகள் எல்லாம் இப்பவும் என் செல்போன்ல பத்திரமா இருக்கு, அதை காட்டி அவனை மிரட்டனும் அவன்லாம் மிரட்டினா பயந்து போகற ஆள் கிடையாது, மனசாட்சி இல்லாதவன்
பவானிக்கு என்ன நடந்ததுன்னு நான் தெரிஞ்சிக்கனும், பவானியை அவன் ஆஸ்பிட்டலுக்கு டெஸ்ட்டுக்காக கூட்டிட்டுப் போயிருக்கனும், அவள் சம்மதிக்கலைன்னாலும் அவன் விட்டிருக்க மாட்டான் கண்டிப்பா கூட்டிட்டுப் போயிருப்பான், டெஸ்ட் முடிஞ்சி ரிசல்ட் வந்திருக்கும் அப்படி வந்தும் அவள் மேல பழி போட்டிருப்பான், அந்த பழியை தாங்கிக்க முடியாம பாவம் அவள் தற்கொலை செய்துக்கிட்டு இருப்பா, இப்படியும் நடந்திருக்கலாம் இல்லைன்னா வேற மாதிரி கூட நடந்திருக்கலாம், அதை எப்படி கண்டுபிடிக்கறது, எப்படியும் நம்மகிட்டயும் தருண் இதே வேலையை காட்டுவான்ல, அப்ப தெரிஞ்சிக்கிறேன் அப்பதான் பவானி ஏன் தற்கொலை செய்துக்கிட்டாள்ங்கற உண்மை தெரியவரும், அவளுக்கு நியாயத்தை