ஒண்ணும் கை போடலை உனக்கு ஒரு சப்போர்ட்டா பாதுகாப்பா இருக்குமேன்னுதான் அப்படி செய்தேன்” என சொல்லிக் கொண்டே அவள் மீது கை போட அவளுக்கு அருவெறுப்பாக இருந்தது, அவனை விட்டு விலகிப் படுத்தாள் ஆனால் அவன் விடவில்லை அவளை தேடிச் சென்று அவளை அணைத்துக் கொள்ள அவளுக்கு வெறுப்பே வந்து விலகினாள்
”போதும் தருண் எனக்கு கடுப்பா வருது ப்ளீஸ், என்னை விட்டு விலகி போ“ என கத்த அவனோ
”ரிலாக்ஸ்”
”இதப்பாரு நான் பாதுகாப்பாதான் இருக்கேன், நீ என் மேல கைபோட்டுதான் பாதுகாப்பு தரனும்னு அவசியம் இல்லை புரியுதா“
”ஓகே குட்நைட்” என சொல்லிவிட்டு அவன் உறங்க அவளுக்குதான் உறக்கம் கெட்டது. நடுஇரவில் நல்ல உறக்கத்தில் இவன் தன்னை ஏதாவது செய்தால் என்னாவது என நினைத்து உறங்காமல் விழித்திருந்தாள்
மறுநாள் காலையில் தருண் அவளிடம் வந்தான், அவளோ கொட்டாவி விட்டபடியே டிபன் செய்தபடி இருக்க அவளின் இந்த நிலையைக் கண்டு இளப்பமாகச் சிரித்தவன்
”என்னாச்சி ஹரிணி நைட் சரியா தூங்கலை போல நான் உன் மேல கை போட்டு வைச்சிருந்தா உனக்கு தூக்கம் வந்திருக்கும் பரவாயில்லை இன்னிக்கு நைட் நான் உன்னை நல்லா பார்த்துக்கிறேன் சரியா“ என வில்லங்கமாகச் சொல்ல அவளோ அவனை கோபமாக முறைத்துவிட்டு டிபன் சாப்பிட்டு ஆபிஸ் சென்றாள்.
ஆபிசிலும் அவளால் வேலை செய்ய இயலவில்லை தருணை எப்படி தன் வழிக்கு கொண்டு வருவது என நினைத்து பலவிதமாக யோசித்தாள்.
பவானியின் டைரியில் படித்த அனைத்தும் அவளுக்கு நினைவு இருந்தது ஆனால் பவானி இறந்த நாளுக்கு முந்தின நாள் என்ன நடந்தது என அப்போது யோசித்துப் பார்த்தாள்