”எப்படி இதை நம்பறது“
”நம்பித்தான் ஆகனும் ஏன்னா நான் உன்கிட்ட உண்மையா நடந்துக்கிட்டேன் ஆனா, நீ எனக்கே துரோகம் செய்துட்ட, இனியும் உன்கூட வாழ்ந்தா, அது வாழ்க்கையா இருக்காது நரகமாதான் இருக்கும், எதுக்கு உன்னால என் பேரும் கெடனுமா இருக்கற மதிப்பு மரியாதையை காப்பாத்திக்க உன்னை விட்டு போகலாம்னு இருக்கேன்“
”உளறாத”
”அட உண்மையைதான் சொல்றேன் என்கிட்ட இருக்கற குறையை நினைச்சி கண்டிப்பா இந்நேரம் உன் வாழ்க்கையில புதுசா ஒருத்தன் வந்திருக்கனுமே”
”ச்சீய் என்ன பேச்சு இது“
”நான் என்ன இல்லாததையா சொன்னேன், இளங்கோவை காதலிச்சி அவனை நினைச்சி வாழ்ந்தப்பவே உனக்கு நான் தேவைப்பட்டேன், எனக்கு இருக்கற குறையை வைச்சி கண்டிப்பா நீ இன்னொருத்தனோட தேவை அவசியம் வேணும்னு முடிவு எடுத்திருப்பியே“
”தருண் அவ்ளோதான் உன்னோட லிமிட், இதுக்கு மேல எதையாவது பேசின நான் சும்மாயிருக்க மாட்டேன், உன்னை பத்தி எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன்”
“தாராளமா சொல்லு” என்றதும் அவளுக்கே ஆச்சர்யம்
”என்ன ஆச்சயர்மா இருக்கா, என்னடா இவன் இப்படி பேசறான்னுதானே என் குறையைப் பத்தி நீ வெளிய சொல்றதால எல்லாரும் என்னை கேலியா பார்ப்பாங்கதான் ஆனா, அதே உன்னை பத்தின விசயத்தை வெளிய சொன்னா எல்லாரும் உன்னை கேவலமா பார்ப்பாங்க”
”புரியலை“
”எனக்கு ஆண்மையில்லைங்கற விசயத்தை விட நீ நடத்தை கெட்டவள்ங்கற விசயம் மட்டும்