”என்ன இழுக்கறீங்க“
”இல்லை நான் என் குறையை சொல்லி கிட்டத்தட்ட 3 மாசம் இருக்கும்ல“
”எதுக்கு அதைபத்தி கேட்கறீங்க“
”இல்லை இந்த 3 மாசத்துல நீ ஏதாவது தப்பு செய்து, அதனால கர்ப்பமா இருக்கியோ”
”சே சே சத்தியமா இல்லை என் மேல அடுத்தவன் நிழல் கூட படலை நான் உத்தமி“
”நீ உத்தமியோ, பத்தினியோ அதை நான் எப்படி நம்பறது”
”அதுக்கு நான் என்ன செய்றது எனக்கு போன வாரம்தானே பீரியட்ஸ் வந்தது மறந்துட்டீங்களா”
”ஆமாம்ல மறந்தே போயிட்டேன்”
”இப்பவாச்சும் நம்புங்க தருண்”
”இப்பவும் என்னால நம்ப முடியலை பவானி எனக்கு குறையிருக்கு, அதனால நீ கர்ப்பமானா நான் கண்டுபிடிச்சிடுவேன் பெரிசா பிரச்சனையாயிடும்னு பயந்து கர்ப்பம் ஆகாம கூட நீ மத்த ஆம்பளைங்களோட அப்படி இப்படி இருந்திருப்பல்ல” என சொல்ல பவானிக்கு திக்கென்றது
அவனது பேச்சைக் கேட்டு அந்த நொடியே ஒன்று அவனை கொன்றுவிடலாம் அல்லது தான் தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்றுதான் நினைப்பு வந்தது பவானிக்கு
”நாக்குல நரம்பில்லாம பேசாதீங்க தருண், நம்புங்க நான் தப்பு செய்யலை செய்யவும் மாட்டேன், நான் உங்களுக்கு உண்மையா இருக்கேன் நேர்மையா இருக்கேன் நம்புங்க தருண்” என கண்கள் கலங்கி கண்ணீருடன் பேச அவனோ மனசாட்சியில்லாமல் பேசிவைத்தான்.