”ஆமாம்டா என்னடா செய்வ”
”நீ எங்கிருந்தாலும் உன்னை தேடி பிடிக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது, உன்கிட்ட வருவேன், பார்க்கிறியா”
”வந்து மட்டும் என்ன செய்வ வெட்டியாதானே கிடப்ப, அதுக்கு நீ வீட்லயே வெட்டியா இரு” என சொல்லி போனை கட் செய்துவிட்டாள், அதில் தருணுக்கு கோபம் பொங்கியது மறுபடியும் அவளுக்கு போன் செய்ய அது சுவிட்ச் ஆப் என வரவே அதிர்ந்தான்
”அடிப்பாவி இவளைப் போய் நல்லவள்ன்னு நினைச்சேனே, இப்படி பொறுக்கியாட்டம் அலையறாளே, பவானியே மேல் என்கூட வாழ முடிவு எடுத்தா, இவள் என்னடான்னா இப்படியிருக்கா என்னவோ இளங்கோ இளங்கோன்னு உருகினா அது எல்லாம் பொய்யோ சே இவளை போய் நம்பி ஏமாந்துட்டோமா இல்லை இவள் நம்மளை வெறுப்பேத்தறா, அவள் கேட்ட டைவர்ஸ் நானா கொடுக்கனும்னு இவ்வளவு விசயம் செய்றா, நீ எட்டடி பாஞ்சா நான் பதினாறு அடி பாய்வேன் பார்க்கலாம்டி, நீ என்னதான் என்னை அசிங்கப்படுத்தி கேவலப்படுத்தினாலும் உனக்கு நான் டைவர்ஸ் தரமாட்டேன், சாகற வரைக்கும் நான் உனக்கு கணவனா உன்கூடவே இருப்பேன்” என மனதில் உறுதி பூண்டான்
மறுநாள் இரவு ஹரிணி வீடு திரும்பினாள், தான் வெறுப்பேற்றி விட்டதில் தருண் கோபத்துடன் இருப்பான் சண்டையிடுவான் என எதிர்பார்த்தாள் ஆனால் அவனோ அப்படி ஏதும் செய்யாமல் அவளிடம் அன்பாக பேச அவள் கடுப்பானாள், அவளின் எண்ணம் தவிடுபொடியானதைக் கண்டு தருண் உள்ளுக்குள் மகிழ்ந்தான்.
ஒரே அறையில் ஒரே படுக்கையில் இருவரும் படுத்துக் கொண்டார்கள், அவனோ அவளின் மேல் கை போட அவள் தட்டிவிட்டு
”அதான் உன்னால எதுவும் முடியாதுல்ல அப்புறம் எதுக்கு சீன் போடற ஒதுங்கி படு”
”இப்பவும் சொல்றேன் நான் உன்னுடன் உறவுகொள்வதற்க்காக கல்யாணம் செய்துக்கலை, பாதுகாப்பு தர்றதுக்காக கல்யாணம் செய்துக்கிட்டேன், இப்பகூட உன் மேல ஆசைப்பட்டு