“ப்ளீஸ் அண்ணி!”
கிருத்திகா கெஞ்சவும், “நீங்க கேட்குறதை செய்றது கஷ்டமில்லை! ஆனால்...” என்று அரை மனதுடன் இழுத்தாள் கீதா!
“இந்த ஆனால் எல்லாம் வேண்டாம் அண்ணி! பயப்படாதீங்க... எல்லாமே நல்லதா தான் நடக்கும். நான் சொன்னதை செய்ய மட்டும் மறந்திராதீங்க. வேற யாருக்கும் இது தெரிய வேண்டாம். உங்க ஓட்ட வாய் ஹீரோவையும் சேர்த்து தான் சொல்றேன்.”
கிருத்திகா சொன்னது காதில் விழுந்ததுப் போல விஜயின் கார் அவர்களின் அருகே வந்து நின்றது.
“வெளியே வந்தா ஃபோன் எடுத்துட்டு வரக் கூடாதா???”
அவளைப் கோபமாக பேச தொடங்கியவனின் ஸ்ருதி கீதாவைப் பார்த்ததும் இறங்கிப் போனதை கவனித்து கிருத்திகாவிற்கு சிரிப்பு வந்தது!
இவர்களை போல அன்னியோன்யமான தம்பதியாக ராஜுடன் ஜோடியாக வாழ வேண்டும்!
இவர்கள் என்று இல்லையே அம்மா-அப்பா, அத்தை-மாமா, வெற்றி-மிருதுளா என்று ஒவ்வொரு ஜோடியிடமும் ஒவ்வொரு விதமான பிரத்தியேக குணாதிசயம் இருக்க தான் செய்கிறது!
அந்த மொத்த குணாதிசயங்களையும் சேர்த்து அன்னியோன்யமாக, சந்தோஷமாக, காதலாக, ராஜுடன் வாழ வேண்டும் என்ற ஆசை அவளுள் பெரும் ஆவலாக எழுந்தது.
இந்த யோசனையில் விஜய் சொல்லிக் கொண்டிருந்ததை கவனிக்காமல் விட்டவளுக்கு டெல்லி என்று அவன் சொன்னது மட்டும் காதில் விழுந்தது.
“யார் டெல்லிக்கு போறது?”