சிக்ஸ்டீன் டு ட்வென்டி ஹவர்ஸ் அங்கே தான் நீ ஸ்பென்ட் செய்வ. ஸோ, யூ மைட் ரிமெம்பர் சம்திங்.”
பெரியவரின் பேச்சை மறுக்க முடியாது, “ஷுயர் சார் வர முயற்சி செய்றேன்,” என்றாள் கிருத்திகா.
“வீ டியர்லி மிஸ் யூ கீர்த்ஸ். நீங்க இல்லாம நாலு அஞ்சு ப்ராஜக்ட்ஸ் மிஸ் செய்துட்டோம். எப்போ வருவீங்கன்னு காத்துக்கிட்டே இருக்கோம். நீங்க ஒரு பொக்கிஷம். உங்களை ரொம்ப பத்திரமா பார்த்திருந்திருக்கனும். உங்க அருமை தெரியாத அந்த தியாகு கிட்ட போய் மாட்டி கிட்டு இருக்கீங்க. யூ நோ வாட் கீர்த்ஸ், உங்களுக்கும் அந்த தியாகுவுக்கும் கல்யாணம் நடக்க நான் விட்டிருக்கவே கூடாது. ஸ்டபர்னா இருந்து உங்களை நான் கல்யாணம் செயதிருக்கனும். ஹீ இஸ் தி ரூட் காஸ் ஆஃப் ஆல் தீஸ் ப்ராப்ளம்ஸ்!”
அவ்வளவு தான் கிருத்திகாவின் மரியாதை போர்வை எல்லாம் பறந்து போனது!!!! அவளுடைய ராஜை ஒருவன் குறை சொல்வதா? அதுவும் அவள் அவனை திருமணம் செய்துக் கொண்டதே தவறு என்பதா!!!!
“ஹலோ, என்ன பேசுறீங்க? அவர் என்னோட ஹஸ்பன்ட். எங்களுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் மேல ஆச்சு. ஒரு கல்யாணமான பொண்ணு கிட்ட பேசுற மாதிரியா பேசுறீங்க? டோன்ட் யூ ஹாவ் எனி சென்ஸ்?”
கிருத்திகா கோபத்துடன் சீற, கார்த்திக்கின் முகம் சிறுத்துப் போனது. தயக்கத்துடன் அருகே இருந்த தந்தை பக்கம் பார்த்தான்.
அவரின் முகத்திலும் கோபத்தின் ரேகை தெரியவும், முகத்தை குனிந்துக் கொண்டான்.
“சாரி கீர்த்ஸ். ஐ அபாலஜைஸ் ஃபார் ஹிம். உனக்கு ஞாபகம் இருக்கோ என்னவோ, இவன் உன்னை கல்யாணம் செய்துக்க ஆசை பட்டான். அதே நினைப்புல முன்பு ஒரு தடவையும் இதே போல அறிவில்லாம கேள்வி கேட்டு உன் கிட்ட பேசி திட்டு வாங்கி கிட்டான். திரும்பவும் அதே! ஆனால் ஒரு விஷயம் சொல்லனும், அம்னீஷியாவோ இல்லையோ உன் கணவர் மேல நீ வச்சிருக்க அஃபெக்ஷன் அப்படியே மாறாமல் இருக்கு! தட்ஸ் குட்!”