(Reading time: 6 - 12 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

ஆன் செய்துப் பேசினாள்.

   

“ஹலோ!” வினாயக்கின் குரல் ஃபோனில் கேட்டது.

   

“வினாயக் உங்களை தேடி ஹோட்டலுக்கு வந்தோம். நீங்க எங்கே இருக்கீங்க?”

   

“நான் மார்க்கெட் ஸ்ட்ரீட்ல இருக்கேன் மேடம்.” வினாயக் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது, “அப்படியே ஒப்பிக்காதே வினாயக்,” என்ற பெண் குரல் கேட்டது. உடனேயே மொபைலில் அழைப்பும் துண்டிக்கப் பட்டது.

   

“மார்க்கெட் ஸ்ட்ரீட்ல என்ன செய்றார் வினாயக்?” சத்யா கேள்விக் கேட்டு கொண்டிருக்கும் போதே சக்தி ஜீப்பில் ஏறி அமர்ந்தாள்.

   

“பேச டைம் இல்லை சீக்கிரம் ஏறு சத்யா. ப்ரியம்வதா பைத்தியக்காரத்தனமா எதையாவது செய்றதுக்கு முன்னாடி வினாயக்கை நாம சந்திக்கனும்,” என்றாள் சக்தி.

   

சத்யாவிற்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை!

   

“ப்ரியம்வதா என்ன செய்யப் போறா? எனக்கு ஒன்னும் புரியலையே சக்தி?”

   

“பச், முதல்ல ஏறு, அப்புறம் பேசலாம்!”

   

சத்யா ஏறி அமர்ந்தப் பிறகு சக்தி ஜீப்பை வேகமாக கிளப்பி ஒட்டினாளே தவிர வாயைத் திறக்கவில்லை.

   

“சக்தி, ப்ரியம்வதா பத்தி ஏதோ சொன்ன? என்னன்னு முழுசா சொல்லு, எனக்கு தலையே வெடிச்சிடும்!”

   

“வினாயக் மொபைல்ல பேசினப்போ ஒரு பொண்ணு குரல் கேட்டுச்சா?”

   

“ஆமா, அது ப்ரியம்வதாவா? சரி, அதுக்காக?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.