(Reading time: 9 - 17 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

இதற்கு நடுவில் செய்தி தாளில் வந்திருந்த செய்தியை பார்த்து சஞ்சீவ் திகைப்பில் ஆழ்ந்துப் போனான். எஸ்.எ இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை அர்ச்சனாவும், இந்துவும், நந்தினி பேருக்கே மொத்தமாக மாற்றிக் கொடுத்திருந்தார்கள். அது மட்டும் இல்லாமல், நந்தினியையே அந்த நிறுவனத்தின் எம்.டி யாக நியமித்திருப்பதாகவும் பிஸ்னஸ் பக்கத்தில் செய்தி வந்திருந்தது. நந்தினி சரவணின் முதல் மனைவியின் மகள் என்னும் செய்தியும் அதில் இடம் பெற்று இருந்தது.

   

இந்து இனி எஸ்.எ இன்டஸ்ட்ரீஸ் எனும் பெரிய நிறுவனத்தின் எம்.டி இல்லை!!! இனிமேல், அவன் சொன்னது போல அவள் கம்பெனி எதையும் நிர்வாகம் செய்யாமல் வீட்டு நிர்வாகம் தான் செய்ய போகிறாள்! தன்னுடைய ‘மெகா அச்சீவ்மென்ட்’டிற்காக சந்தோஷம் படும் போதே, புரியாத விதமாக அவனிற்கு வருத்தமாகவும் இருந்தது!

  

இந்துவை கம்பெனியின் எம்.டி’யாக இல்லாமல் யோசித்துப் பார்க்க கூட அவனுக்கு பிடிக்கவில்லை!

   

ஆனால், அதைப் பற்றி எல்லாம் அதிகம் யோசிக்க விடாமல், அதோ இதோ என்றிருந்த திருமண நாளும் விரைவாக வந்து சேர்ந்தது! 

   

திருமணத்திற்கு முன்பான சடங்குகளில் தன் அருகில் நின்ற இந்துவைப் பார்த்து முகத்தை சலனமில்லாமல் வைத்திருப்பது சஞ்சீவிற்கு மிகவும் கடினமாக தான் இருந்தது! எத்தனை முயற்சி செய்தாலும் அவனின் கண்களும், கருத்தும் மீண்டும் மீண்டும் அவள் இருந்த பக்கம் தான் சென்று நின்றது!

  

{/f90filter}அவனிருந்த குழப்பமான மனநிலையிலும் கூட அவளை ரசிக்க அவனின் மனம் தவறவில்லை!

   

ஆனால் அவனின் முகம் மட்டும் எப்போதும் போல கல்லாக தான் இறுகிப் போய் காட்சி தந்தது!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.