(Reading time: 9 - 17 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

 🌼🌸❀✿🌷

   

சஞ்சீவைப் போலவே தான் இந்துவும் தவித்துக் கொண்டிருந்தாள்! அவளின் மனதிலும் இன்பமும் வருத்தமும் ஒன்றாக அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தது!

   

அவளுடைய மனம் விரும்பும் நாயகனே அவளுக்கு மாலை சூடப் போகிறான்! ஆனால் அவளால் முழுமையாக சந்தோஷப் பட தான் முடியவில்லை.

  

அவளின் உதட்டில் எப்போதுமே மற்றவர்களுக்காக பெரிய புன்னகை ஒட்டிக் கொண்டு இருந்தது! ஆனால் அவள் மனம் மட்டும் மற்றவர்களுக்கு தெரியாத மெல்லிய கலக்கத்தில் உழன்றுக் கொண்டு இருந்தது!

   

அன்றைய நிகழ்வுகள் முடிந்து அனைவரும் திருமண மண்டபத்தில் இருந்த அவரவர் அறைகளுக்கு திரும்பினார்கள். அடுத்த நாள் ‘பெர்பெக்ட்’ ஆக அமைய பெரியவர்கள் சீரியஸாக திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்!

   

இந்து வீணா, கீதா, கண்மணியிடம் மாட்டிக் கொண்டு விழித்துக் கொண்டிருந்தாள்.

   

வீணா இரண்டு நாட்களுக்கு முன் தான் சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்திருந்தாள். ஆனால், அவள் மிஸ் செய்த இரண்டு மாததிற்குமாக சேர்த்து தோழியை கிண்டல் செய்து தீர்த்துவிட்டாள்! கேலி, கலாட்டா, அரட்டை என எல்லாம் முடிந்து ஒருவழியாக எல்லோரும் தூங்க முடிவு செய்து படுத்தனர். சிறிது நேரத்தில் அந்த அறையே அமைதியாக இருந்தது. ஆனால் இந்துவின் மனதில் பெயருக்கும் அமைதி இல்லை! கண்களுக்கு தூக்கமும் வரவில்லை.

   

{/f90filter}

விடிந்தால் திருமணம்!

   

மனதில் ஓடிய கலக்கம் கலந்த மகிழ்ச்சியுடனே சுவர் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள் இந்து! மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.