(Reading time: 9 - 17 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

யூ லவ் ஹிம் டூ! அப்புறம் என்ன! எல்லாமே சரியா தான் இருக்கும்!”

  

தோழியின் வார்த்தைகள் இந்துவினுள் நம்பிக்கையை ஏற்படுத்தியது! எல்லாம் சரியாக தான் நடக்கும் என்ற உணர்வு மேலோங்கியது!

   

வார்த்தைகளால் வீணாவிற்கு பதில் சொல்லாது, அவளின் கையை பிடித்திருந்த வீணாவின் உள்ளங்கையை இன்னும் இறுகப் பிடித்துக் கொண்டாள் இந்து!

   

புரிந்துக் கொண்டவளாக, “குட் கேர்ள் இந்து! அப்படியே தூங்கு,” என்று வீணா சொல்ல,

  

“ப்ச் வீணா, இந்து தூங்குவா, நீ போய் தூங்கு! தூக்கம் வரலைன்னா போ போய் அவினாஷை எழுப்பி டிஸ்டர்ப் செய்,” என பாதி தூக்க கலக்கத்துடன் சொன்னாள் கீதா!

   

“ஓ! நீங்க இப்படி சொன்னா நான் உடனே நீங்க ராஜீவ் கிட்ட போங்கன்னு சொல்வேன்னு நினைப்பா??? நோ வே கீதா அக்கா! நீங்க இன்னைக்கு இங்கேயே தான்!!!”

   

“வீணா!!!” என கீதா கோபத்துடன் அழைக்கவும், இந்துவும், வீணாவும் மற்றதை எல்லாம் மறந்து சிரித்தார்கள்! 

   

 🌼🌸❀✿🌷

   

காலையில் அனைத்தும் திட்டம் போட்டது போல நன்றாகவே நடந்தது!

   

திருமணத்திற்காக மணப்பெண்ணை அழைத்து வரச் சொன்ன போது, கழுத்தில் மாலையுடன், அலங்காரத்தில் வந்த இந்துவை இமைக்காமல் பார்த்தான் சஞ்சீவ். 

   

மெல்லிய சிகப்பு நிற சேலை முழுவதும் தங்க நிறத்தில் வேலைப்பாடுகள் இருக்க, தங்க தாரகையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள் இந்து

{/f90filter}

! அவள் அணிந்திருந்த பட்டுப் புடவை, தங்க நகைகள், அதிலிருந்த வைரங்கள் என அனைத்தையும் தாண்டி அவளின் முகம் தான் அதிக எழிலுடன் பளிச்சிட்டு கண்களை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தது!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.