நாளை இந்த நேரம்???
நினைக்கும் போதே அவளுக்குள் பலரகமான மாற்றங்கள் ஏற்பட்டது!
சஞ்சீவ் அவள் மீது வைத்திருந்த காதலை நம்பி தான் இந்த கண்டிஷன் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கிறாள்! ஆனால், ஒருவேளை அவனின் மனம் அவளை மொத்தமாக வெறுத்துப் போயிருந்தால்????
சஞ்சீவிடம் சொன்னதுப் போல அம்மாவிடம் பேசாமல் எல்லாம் அவளால் இருக்க முடியுமா??
சஞ்சீவின் மனதை எப்படி மாற்றுவது??? இன்றைய சடங்குகளில் அவளின் அருகே இருந்தாலும் சஞ்சீவ் பல மைல்களுக்கு அப்பால் இருப்பதைப் போல தான் நின்றிருந்தான்! அவனின் முகத்தில் பெயருக்கும் மகிழ்ச்சி இல்லை!
அவனை பழைய சஞ்சீவாக மாற்றுவது எப்படி? ஒருவேளை அவன் மாறாமலே இருந்தால்???
இந்து புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்க, வீணா எழுந்து அவளின் அருகே வந்தாள்!
“என்ன கல்யாணப் பொண்ணே தூக்கம் வரலையா???”
கேலியாக கேட்டுக் கொண்டே இந்துவின் கையைப் பற்றிய வீணா, அது சில்லிட்டுப் போயிருப்பதை உணர்ந்ததும் கேள்வியுடன் அரையிருளில் தெரிந்த தோழியின் முகத்தைப் பார்த்தாள்!
தோழி கேட்காத கேள்வியையும் புரிந்துக் கொண்டு, “என்னன்னு சொல்ல தெரியலை வீணா! கொஞ்சம் நெர்வஸா இருக்கு,” என்றாள் இந்து!
“கமான் இந்து! லவ் மேரேஜ்க்கு உனக்கு என்ன நெர்வஸ்னஸ்?? கல்யாணம்
{/f90filter}
ங்குறதாலேயா??? நீ எப்போவுமே எங்க இந்து தான்! சஞ்சீவ் ஏதாவது மாத்த நினைச்சா நாங்க எல்லாம் பொங்கி எழுந்து உனக்கு சப்போர்ட்க்கு வந்திர மாட்டோம்!!! ரிலாக்ஸ்டா இரு இந்து! சஞ்சீவ் லவ்ஸ் யூ!