இதுவரை அவன் அவளை பட்டுப் புடவையில் பார்த்து இல்லை! முதல் முதலாக அவளை முழு மணப்பெண் அலங்காரத்தில் பார்ப்பதும், இன்னும் சில நிமிடங்களில் அவள் அவனின் மனைவியாகப் போகிறாள் என்ற எண்ணமும் அவனுக்கு காதல் மயக்கத்தையும், மந்தகாசத்தையும் ஏற்படுத்தியது!
ஆனால், இந்த முறை பேருக்கும் கூட இந்து அவன் பக்கம் பார்க்கவில்லை!
கீதாவும் வீணாவும் அவளை அழைத்து வந்து மணமேடையில் அவன் அருகில் அமர வைத்தனர். எதையோ சரி செய்யும் சாக்கில், மீண்டும் இந்து பக்கம் திரும்பினான் சஞ்சீவ். அவளின் முகமோ குனிந்திருந்தது.
அவர்கள் இருவரின் பின்னே நின்றிருந்த வீணா, சஞ்சீவின் அருகே குனிந்து,
"மாப்பிள்ளை சார், போதும் சைட் அடிச்சது! இன்னும் கொஞ்ச நேரத்தில தான் உங்களுக்கு ஃபுல் லைசென்ஸ் கிடைக்க போகுதுல, அப்புறம் என்ன?" என்றாள் கேலியாக.
பதிலாக ஒரு புன்னகையை கொடுத்து விட்டு முகத்தை திருப்பிய சஞ்சீவ், அப்போதும் கொஞ்சமாக நகர்ந்து இந்துவை உரசியப்படி அமர்ந்தான். இந்துவிடம் இப்போதும் எந்த வித சலனமும் இல்லை! அவனுக்கு ஏமாற்றமாக தான் இருந்தது!!!
குறித்த நல்ல நேரத்தில், மந்திரங்கள் ஒலிக்க, இந்துவின் கழுத்தில் தாலி அணிவித்தான் சஞ்சீவ்.
இந்துவிற்கு சிலிர்த்தது!!!
சற்றே விழி உயர்த்தி சில வினாடிகளுக்கு முன் கணவனாகி விட்டவனைப் பார்த்த
{/f90filter}
ாள். மாப்பிளை கோலத்தில் இன்னும் அதிக வசீகரத்துடன் இருந்தான் சஞ்சீவ்! ஆனால், அவள் எதிர்ப்பார்த்ததுப் போலவே அவனின் முகம் இப்போதும் அதே கல் போன்ற முக பாவத்துடன் தான் இருந்தது!