தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 40 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“ஆமாம் பிரின்சஸ்! தியாகு டூ ஹவர்ஸ்ல வீட்டுல இருந்து கிளம்பனுமாம். ஃப்ளைட்ல போறானாம், அதான் உன்னை ரீச் செய்ய ட்ரை செய்துட்டே இருந்திருக்கான்,” என கூடுதல் விபரங்கள் சொன்னான் விஜய்!
“இரண்டு மணி நேரத்திலேயா கிளம்புறார்??? அப்போ நான் உடனே கிளம்புறேன். நீங்களே அம்மா கிட்ட சொல்லிடுங்க,” என்றாள் கிருத்திகா பரபரப்புடன்.
“ஹேய் பிரின்சஸ், நீ தனியா எப்படி போவ? நான் உன்னை ட்ராப் செய்றேன்!”
“இல்லை வேண்டாம்ண்ணா. நான் இருக்க மனநிலையில தனியா ட்ராவல் செய்தால் தான் சரியா இருக்கும்”
“டிரைவரா என்னை நினைச்சுக்கோயேன்!”
“ப்ளீஸ்ண்ணா! அதெல்லாம் வேண்டாம். நான் ஆட்டோ பிடிச்சு போறேன். அவர் வேற உடனே கிளம்பனும்னு சொல்றீங்களே, இப்போ பேச டைம் இல்லை,” என்றவள், எதிரே வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்டாள்.
விஜயிற்கு கிருத்திகாவின் பேச்சும், நடவடிக்கையும் புதிராக இருந்தது.
ஆனால் கீதாவின் முகம் தெளிவாக இருந்தது.
❀✿❀✿❀✿
ராஜ் டெல்லி போகிறானா? அவனை விட்டு விட்டு அவள் எப்படி இருப்பது?
இந்த ஒரே கேள்வி தான் கிருத்திகாவின் மனதில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.
ஆட்டோவிற்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு, அவள் வீட்டினுள் வந்த போது, தியாகு ஒரு