பெட்டியுடன் மாடியில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தான்.
“எங்கே போனாலும் ஃபோனை கையில எடுத்துட்டு போக கூடாதா? எத்தனை தடவை ஃபோன் செய்தேன் தெரியுமா?”
அக்கறையும், மெல்லிய கோபமும் கலந்து வந்த தியாகுவின் கேள்வி கிருத்திகாவை மென்மையாக வருடிப் போனது!
“நான் எங்கே இருப்பேன்னு உங்களுக்கும் தெரியுமே! அம்மாக்கு ஃபோன் செய்திருக்க வேண்டியது தானே? அது போகட்டும், என்ன இந்த திடீர் ட்ரிப்?” எனக் கேட்டு பேச்சை மாற்றினாள் அவள்!
“ஒரு ப்ராஜக்ட் வர மாதிரி இருக்கு கீர்த்தி. டெல்லில பத்து பதினைஞ்சு நாள் வேலை இருக்கும். முடிச்சுட்டு வந்திடுறேன்! நீ இங்கே தனியா இருக்க வேண்டாம். உங்க வீட்டுல போய் தங்கிக்கோ.”
“ஹ்ம்ம்ம்ம்... டூ வீக்ஸா???”
கிருத்திகா அந்த கேள்வியை கேட்ட விதத்தில் தியாகுவினுள் சட்டென்று சந்தோஷம் பொங்கியது!
“பத்து நாள், டூ ஃபார்ட்டி ஹவர்ஸ், அவ்வளவு தானே! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வரேன்,” என்றான் அவன் அவளை தேற்றுவதுப் போல!
“ம்ம்ம்... ஆனாலும் பத்து, பதினஞ்சு நாள்ன்னு சொல்றீங்க! பேசாம, நானும் உங்க கூட வரட்டுமா?”
“கீர்த்தி, என்ன இது சின்ன குழந்தை மாதிரி? நான் போறது அஃபிஷியல் ட்ரிப். நான் வெளியில சுத்திட்டே இருப்பேன். நீ தனியா ஹோட்டல் ரூம்ல இருக்கனும். நான் ஃப்ரீயா வேலையை பத்தி யோசிக்க முடியாது. இங்கேன்னா உனக்கு துணையா அத்தை, மாமா, விஜய், கீதா