எம்பி தியாகுவின் வலது கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.
எதிர்பாராத அந்த முத்தத்தில் அவன் ஆச்சர்யப்பட்டு, “ஹேய்!” எனும் போதே,
“இன்னைக்கு ரேஷன் சிஸ்டம்க்கு லீவ்,” என்றவள், அவனின் இடது கன்னத்திலும் மென்மையாக முத்தமிட்டு விட்டு, சட்டென அவனின் இதழ்களிலும் முத்தமிட்டாள்!
நடந்ததை அவன் கிரகிக்கும் முன்பே அவனை மெல்ல தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
“உங்களை ரொம்ப மிஸ் செய்வேன் ராஜ்! சீக்கிரம் வந்திருங்க!”
அவளின் அணைப்பை விலக்க நினைத்தவனை அவளின் குரல் கட்டிப் போட்டது.
அவளை தேற்ற எண்ணி அவளை மென்மையாக அணைத்தவன், மெல்ல தன்னை மறந்துப் போனான்.
உடல் இறுக்கத்துடன் அவளை அணைத்த தியாகுவின் அணைப்பு மெல்ல மெல்ல தன்னை சுற்றி இறுகுவது கிருத்திகாவிற்கு புரிந்தாலும், அதை தடுக்கவோ, அந்த அணைப்பில் இருந்து வெளி வரவோ அவள் எந்த முயற்சியும் செய்யவில்லை.
ஆனால் தியாகு தன்னை மறந்து அவளை அணைத்தது ஒரு சில வினாடிகளாக தான் இருக்க வேண்டும். உடனேயே சுயநினைவு பெற்றவனாக அவளை விட்டு விலகினான்.
கிருத்திகா பக்கம் நேராக பார்க்காமல்,
“நான் கிளம்புறேன்,” என்று தெளிவில்லாமல் சொல்லி விட்டு கீழே வைத்திருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு நடந்து சென்றான்.
சில நிமிடங்களில் கார் கிளம்பி செல்லும் ஓசைக் கேட்டது!