(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

என்றாள்.

   

கிருத்திகா இயல்பாகி விட்டதாக சொன்ன பிறகும், அவளின் கன்னங்களிலேயே கைகளை வைத்திருந்த தியாகு, அவளின் அந்த பட்டுக் கன்னங்களை மெல்ல விரல்களால் வருடிக் கொண்டே,

   

“சரி...” என்றான் மெல்லியக் குரலில்.

   

அவனின் தீண்டலும், அதன் காரணமாக அவளுள் ஏற்பட்ட மாற்றங்களையும் சிலிர்ப்புடன் ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்த கிருத்திகா, தியாகுவின் குரலில் தெரிந்த வேறுபாட்டை உணர்ந்து அவனை நிமிர்ந்து நேராகப் பார்த்தாள்.

   

தியாகுவின் கண்களும் அவள் முகத்தின் மீது தான் அலைபாய்ந்துக் கொண்டு இருந்தது.

   

இருவரின் பார்வையும் ஒன்றாக கலக்க, கிருத்திகாவினுள் பூகம்பம் வந்துவிட்டதைப் போல ஒரே நொடியில் பல விதமான ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது! தியாகுவிற்கும் அப்படி தான் என்பதை அவனின் விரல்களின் தீண்டல் சொல்லாமல் சொன்னது! 

   

அமைதியாகவே ஒரு சில வினாடிகள் (அல்லது நிமிடங்களோ??) சென்றது.

   

“ஃப்ளைட்டுக்கு டைம் ஆகுது கீர்த்தி, நான் கிளம்பட்டுமா?” என்றான் தியாகு.

   

கேள்வியை கேட்டானே தவிர, கிளம்புவதற்கான அறிகுறி ஒன்றும் அவனிடம் இல்லை!

   

“ம்ம்ம்... சரி,” என்ற கிருத்திகாவும் கூட அசையவில்லை.

   

மீண்டும் மௌனம்!

   

“கிளம்புறேன் கீர்த்தி,” என்றான் தியாகு எத்தனையாவதோ முறையாக!

   

“மனசுக்கு என்னவோ போல இருக்கு, அதனால இது எனக்காக,” என்ற கிருத்திகா, மெல்ல 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.