(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

எல்லோருமே இருப்பாங்க.”

   

“ப்ச்... அவங்க எல்லாம் இருப்பாங்க, ஆனா, நீங்க இருக்க மாட்டீங்களே!”

   

அவள் அதை சொன்ன விதம், தியாகு மூடி மறைக்க முயற்சித்துக் கொண்டிருந்த காதலை மெல்ல மெல்ல கண் விழிக்க வைத்தது! மனதை அடக்க போராடிக் கொண்டே,

   

“நான் தான் சீக்கிரம் வந்திருவேன்னு சொல்றேனே,” என்றான் மென்மையாக!

   

“ம்ம்ம்... சரி, டெய்லி காலையிலேயும் நைட்டும் எனக்கு ஃபோன் செய்ங்க!”

   

“ஓகே! வேற ஏதாவது கண்டிஷன் இருக்கா?”

   

இல்லையென்று தலை அசைத்த கிருத்திகாவின் கண்களில் அவளின் மனக் கட்டுப்பாட்டையும் மீறி வருத்தம் தெள்ளத் தெளிவாக தெரிந்தது!

   

“ஹேய் கீர்த்தி, எதுக்காக இப்படி சேட் ஃபேஸோட இருக்க?? ப்ளீஸ் நார்மலா இரு,” என்றான் தியாகு கெஞ்சலாக!

   

“எனக்கு என்னவோ பயமா இருக்கு ராஜ். நான்...”

   

மேலே பேச முடியாமல் தடுமாறினாள் கிருத்திகா.

   

கையில் இருந்த பெட்டியை கீழே வைத்து விட்டு அவளின் அருகே வந்து அவளின் முகத்தை கையில் பற்றிய தியாகு,

   

“நீ குட்டி பாப்பா மாதிரி பீகேவ் செய்ற கீர்த்தி! இந்த மாதிரி நீ என்னை வழி அனுப்பினா நான் எப்படி போய் வேலையை செய்றது? கம் ஆன்,” என்றான்.

   

“சரி, நான் சோகமா இல்லை! சிரிக்கிறேன்!!!” என சொல்லி ஈ என போலியாக சிரித்தவள், கூடவே, “நீங்க ஃபீல் செய்யாம பார்த்து போயிட்டு வாங்க. சீக்கிரம் வேலையை முடிச்சிடுங்க,” 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.