தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 40 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தியாகு திடீரென்று கிளம்பிச் சென்றதைப் பற்றி யோசித்துக் கொண்டே கிருத்திகா நிற்க, வீட்டின் முன்னே கார் வந்து நிற்கும் ஓசைக் கேட்டது.
யாராக இருக்கும்? போய் யாரென்று பார்க்க வேண்டுமா?
அசைய மனமில்லாமல் கிருத்திகா யோசிக்கும் போதே, யாரோ நடந்து வரும் ஓசையும், கதவு திறக்கப்படும் சத்தமும் கேட்டது.
யாரது?
கேள்வியுடன் வாசல் பக்கம் திரும்பி பார்த்தவளின் முகத்தில் இன்ஸ்டன்ட் புன்னகை தோன்றியது!
ஏனென்றால் வாசலில் தியாகு நின்றிருந்தான்!!!
“கீர்த்தி...”
அவன் ஏதோ சொல்ல தொடங்கி, முடியாது தடுமாறவும், அவளின் புன்னகை பெரிதானது.
“போதும் போதும் இளிச்சது! கிளம்பு கீர்த்தி, உன்னை வீட்டுல ட்ராப் செய்துட்டு போறேன்,” என தியாகு சொல்லவும், ‘அதானே பார்த்தேன்’ எனும் ‘கெத்து லுக்கை’ அவனுக்கு கொடுத்தவள், மேலும் கேள்விகள் எதுவும் கேட்டுக் கொண்டிருக்காமல் அமைதியாக அவனுடன் கிளம்பினாள்.
காரில் செல்லும் போதும் அவளின் அந்த புன்னகை அவளை விட்டு போகவே இல்லை.
அவள் பக்கம் அவ்வப்போது திரும்பி பார்த்த படி அமைதியாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான் தியாகு. கிருத்திகாவிற்கு அது புரியாமல் இல்லை! ஆனாலும் புன்னகை மட்டும் மின்ன மௌனமாகவே இருந்தாள்.