டைம்லேயே அவன் கிட்ட சொல்லிட்டேன். ஆனால் கீதாக்கு இன்னும் தெரியாது போலருக்கு. அது போகட்டும்! அப்போ நீ என் பேச்சை கேட்டு சும்மா இருக்கலை, எல்லோர் கிட்டேயும் போய் விபரம் சேகரிச்சுட்டு இருக்க!!! ஹ்ம்ம்... இதுக்கு தானா இந்த வீட்டுக்கு விசிட் எல்லாம்?”
“ப்ச்... அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது,” என்றாள் கிருத்திகா அலுப்புடன்!
அவள் சேகரித்த ஓல்ட் மெமரீஸ் எல்லாமே பொய்யா??? அவளுக்கு சோர்வாக இருந்தது!
அவள் பக்கம் ஒரு பார்வை பார்த்த தியாகுவின் முகம் கனிந்தது!
“எனக்கு புரியுது கீர்த்தி! புரியாமல் என்ன, நல்லாவே புரியுது. ஆனால் இப்படி அலைஞ்சு ஸ்ட்ரெயின் செய்து உடம்பை கெடுத்துக்காதே. இன்னைக்கு பார்த்த டாக்டர் ஏதோ தெரபி அப்ரோச் சொல்லி இருக்காராமே? அதைப் பத்தி கொஞ்சமா ரிசெர்ச் செஞ்சுப் பார்த்தேன்! சரியா அப்ரோச் செய்தா, நல்ல ரிசல்ட்ஸ் வர வாய்ப்பு இருக்குன்னு டாக்டர்ஸ் கம்யூனிட்டில சொல்லி இருக்காங்க!”
“ப்ச்... அதெல்லாம் சும்மா, எதுவும் நடக்க போறதில்லை,” என்றால அவள் விரக்தியுடன்!
“பீ பாசிடிவ் கீர்த்தி! உனக்கா ஞாபகம் வரலைனா என்ன, உனக்கு வேண்டிய விபரம் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா நானே டெல்லில இருந்து திரும்பி வந்த உடனே சொல்றேன். தேவை இல்லாம போய் எல்லோர் கிட்டேயும் கேட்டுட்டு இருக்காதே. இது போல தப்பான இன்ஃபர்மேஷன் கிடைச்சாலும் கிடைக்கலாம்!”
“நீங்களே சொல்றீங்களா? ப்ராமிஸ்?” கிருத்திகா குழந்தைப் போல முகம் மலர அவனிடம் வினவினாள்!
“யெஸ் ப்ராமிஸ்,” என்றான் தியாகு அவளின் முக மலர்ச்சியை ரசித்துக் கொண்டே!
“தேங்க்ஸ்! உங்களை 100% நம்பலாம், எனக்கு தெரியும்.”