“எப்படி தெரியும்?”
“உங்க பிஸ்னஸ் எதிக்ஸ் பத்தி விஜய் அண்ணா சொன்னார். ரொம்ப நல்லவர் மட்டுமில்லாமல் வாரி வழங்கும் வள்ளலாமே நீங்க!!! எப்படி இப்படி ஏமாந்தவரா இருக்கீங்க?”
“இதுல ஏமாற என்ன இருக்கு?”
“இப்படி நல்லவரா இருக்குறதால உங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது?”
“இனிமேல் கிடைக்க வேண்டாம், ஏற்கனவே கிடைச்சிருச்சு கீர்த்தி! உன் ஆக்சிடன்ட் பத்தி இன்னமும் முழுசா எதுவும் தெரியலை. ஆனால் அந்த இடத்தில இருக்க மலைகள் எல்லாமே ரொம்ப உயரமானவை. நாலாயிரம் ஐயாயிரம் அடி உயரமானது கூட இருக்கு. எங்கே, என்ன, எப்படி நடந்திருந்தாலும், நீ எனக்கு திரும்ப கிடைச்சுட்டீயே, இதை விட எனக்கு வேறு என்ன வேணும் சொல்லு!”
கிருத்திகா உலக அதிசயத்தைப் பார்ப்பதுப் போல விழிகள் விரித்து ஆச்சர்யத்துடன் அவனைப் பார்த்தாள்.
“என்ன பார்க்குற கீர்த்தி?”
“எப்படி இப்படி இருக்கீங்க? எதனால உங்களுக்கு என் மேல... ஐ மீன் உங்க கீர்த்தி மேல இப்படி ஒரு காதல் ஹுஹும்... அன்பு? அப்படி என்ன...”
அவளின் பேச்சின் நடுவே குறுக்கிட்டவன்,
“வீடு வந்தாச்சு கீர்த்தி! இரண்டு வாரம் உன் கேள்வியை எல்லாம் கட்டிப் போடு. அம்மா அப்பா அண்ணாங்களோட ஜாலியா டைம் ஸ்பென்ட் செய். டைமுக்கு டாக்டரை பார்க்க போ. முழு மனசோட, நம்பிக்கையோட ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ! அதுக்காக ரொம்ப ஸ்ட்ரெயின் செய்யாதே! நான் வந்தப்புறம் நாம பொறுமையா எல்லாத்தையுமே பேசலாம்,” என்றான் மென்மையாக.