(Reading time: 8 - 15 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

“உனக்கு எப்படி அது தெரியும்???”

   

“எனக்கு கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் திரும்ப வருதுன்னு வச்சுக்கோங்களேன். டைம் கிடைக்கும் போதெல்லாம் சுவர்ல தலையை முட்டிக் கிட்டேனா, அப்படி அப்படி கொஞ்சம் அம்னிசியா க்ளியர் ஆகி மெமரி ஃப்ளாஷ் அடிக்குது!!!” 

   

கிருத்திகா கண்களை உருட்ட்க் கொண்டே சொல்லி, அவள் சொல்வது சீரியஸ் பேச்சு அல்ல என்பதை புரிய வைத்து விடவும், தியாகு டென்ஷன் ஆகாமல் சிரித்தான்.

   

“நான் எவ்வளவு சீரியஸ் விஷயம் சொல்றேன், நீங்க என்ன சிரிக்குறீங்க?” பொய்யான கோபத்துடன் வினவினாள் கிருத்திகா!

   

“சுவர்ல தலையை, அதும் உன் தலையை முட்டிக்குற ஆள் தான் நீ!!!! ஆனால் யார் அந்த கதையை உனக்கு சொன்னது? விஜயா? இல்லையே... அவனா இருக்க முடியாதே... ஓ... கீதாவா?”

   

தியாகு பேசிக் கொண்டே யோசித்து, சரியாக கண்டுப்பிடித்து விடவும் கிருத்திகாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது!

   

“ஏன் அண்ணா கிடையாது அண்ணி தான்னு சொல்றீங்க???”

   

“ஏன்னா அது நான் விஜய் கிட்ட மட்டும் சொன்ன பொய் கதை!”

   

“என்னது பொய்யா?” கிருத்திகா கிட்டத்தட்ட 90 டிகிரீஸ் திரும்பி அமர்ந்து தியாகு பக்கம் பார்த்தாள்!

   

“ஆமாம்! உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு ஆரம்பத்துல உன் பாசக்கார அண்ணா கிட்ட ஒரு பொய் சொல்லி வச்சேன். அவன் அப்படியே கீதா கிட்ட சொல்லி இருப்பான் போல இருக்கு. விஜய்க்கு அது நான் சொன்ன பொய்ன்னு தெரியும். நம்ம கல்யாணம் ஃபிக்ஸ் ஆன 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.