(Reading time: 8 - 15 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

ஒரு ட்ராஃபிக் சிக்னலில் கார் நிற்கவும், மீண்டும் தியாகு அவள் பக்கம் பார்த்தான்!

   

இந்த தடவை அமைதியாக இல்லாமல், “என்ன அப்படி பார்க்குறீங்க?” என்றுக் கேட்டாள் கிருத்திகா.

   

“இல்லை, சும்மாவே சிரிச்சுட்டு இருக்கீயே, என்ன பிரச்சனையா இருக்கும்னு யோசிச்சேன்! எதுக்கும் டாக்டரை கன்சல்ட் செய்வோமா கீர்த்தி?”

   

தியாகுவின் குரலில் கேலி மட்டுமே இருந்தது!

   

கிடைத்தது வாய்ப்பு என்று கட்டிப் பிடிப்பதையும் பிடித்து விட்டு, அப்புறம் ‘அம்போ’ என விட்டு விட்டு கிளம்பி விட்டு, சார் கிண்டல் வேறு செய்கிறாரா, என மனதினுள் நினைத்துக் கொண்டவள்,

   

“உங்களை பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்,” என்றாள் கண்களை விரித்து!

   

“என்னை பத்தியா? என்ன யோசிக்குற?” என்று கேட்டவனின் குரலில் ஆர்வம் அதிகமாக இருந்தது.

   

அவனின் ஆர்வம் புரிந்து அவளின் புன்னகை பெரிதானது!

   

“நீங்க போய் எப்படி லவ் செய்து கல்யாணம் செய்துக்கிட்டீங்கன்னு யோசிக்குறேன்,” என்று சொல்லி கிருத்திகா அவனை சீண்டவும்,

   

“ஹேய்,” என்றான் தியாகு!

   

“சீரியஸா தான் சொல்றேன்! அதைப் பத்தி யோசிச்சு தான் எனக்கு சிரிப்பு வந்துச்சு. ஏதோ காலேஜ் டைம்ல இருந்த பயங்கர லவ்வாமே! கேள்வி பட்டேன்!!!”

   

தியாகு அவள் பக்கம் திரும்பி ஒரு விதமான ஆராயும் பார்வையை பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.