(Reading time: 7 - 14 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

அவனே அறியாமல் அவனின் கண்கள் அவளை ஆராய்ந்தன.

   

அவள் அணிந்திருந்த சம்கி வேலை பாடு நிறைந்த வெள்ளை நிற சுரிதார் அவளுக்கு அழகாக பொருந்தி இருந்தது. முகத்தில் இருந்த கோபமும், அதற்கு ஏற்ப ‘ஸ்பார்க்’ தெறித்த அவளின் கண்களும், அழகிய தொங்கட்டான்களும்...

   

திடீரென அவனுள் முழுதான ரசாயன மாற்றம்!!!!

   

அவன் அவளையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே நின்றிருக்க, அவனை தேடி வந்த சாரதா, அவனின் தோளை மெல்ல தட்டி திசை திருப்பினாள்.

   

“பூ என்ன ஆச்சு தியாகு? ரொம்ப லேட் ஆச்சே???”

   

“வந்திரும் சித்தி,” என்ற தியாகுவின் கண்கள் தானாக மீண்டும் ‘அவளி’டமே சென்றது!

   

தியாகு பார்க்கும் திசையில் பார்த்த சாரதா,

   

“அட கிருத்திகா கிட்ட மாட்டிக் கிட்டானுங்களா? நல்லா வேணும் அவனுங்களுக்கு!! மாப்பிளை, அதான் உன் ஃப்ரென்ட் சொந்தக்காரங்க தான் ரெண்டுப் பேரும். பொண்ணுங்களை கிண்டல் செய்து இம்சை செய்துட்டு இருந்தானுங்க. இவனுங்களை கேள்வி கேட்கவாவது இவளை மாதிரி ஒருத்தி வேணும் போலிருக்கு,” என்றாள்.

   

“யாரு சித்தி இந்த பொண்ணு?”

   

“இவ தான் விஜயோட தங்கச்சி. அதான் அவரோட சித்தி பொண்ணு கிருத்திகா!”

   

ஓ! இவள் தானா கீதா சொன்ன அந்த பூச்சாண்டி??? 

   

மனதில் ஓடிய சிந்தனையுடனே, சாரதாவிடம், “பூ கொஞ்சம் லேட்டா வருமாம் சித்தி. மத்ததை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.