(Reading time: 7 - 14 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தியாகுவும் அப்படி தான் தெரிந்துக் கொண்டான்!!! 

   

காதல் என்றில்லை, பெண்கள் மீதே அவனுக்கு பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை.

   

அன்பான பெற்றோர்! தேவைக்கு பணம்! நல்ல நிலையில் இருக்கும் அவனின் சொந்த நிறுவனம்! அதற்கு மேல் வாழ்வில் எதுவும் வேண்டும் என்று அவனுக்கு தோன்றியதில்லை.

   

எல்லாம் அவளை, அவனின் கீர்த்தியை பார்க்கும் வரை தான்!!!

   

ருத்திராட்சை அணிந்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தவனை ஒரே நாளில் தலைகீழாக புரட்டிப் போட்டவள் அவள்.

   

கிருத்திகாவை பற்றி யோசித்தப்படி சீட்டில் இருந்த ஹெட்ஃபோனை எடுத்து காதில் அணிந்துக் கொண்டான் அவன். அவனுக்கு பிடித்த தில் தோ பாகல் ஹைன் திரைப்பட பாடல் பாடிக் கொண்டிருந்தது.

   

kitne hi duur duur hon ham donon ke raaste

[ No matter how far apart their paths (through life) may be, ]

mil jaate hain jo bane ek duuje ke vaaste

[ those made for each other (always) meet ]

   

தியாகுவின் உதட்டில் மெல்லிய புன்னகை உதயமானது! பாடல் சொல்வதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களோ என்னவோ, ஆனால் அவன் விஷயத்தில் அது சரி தான்!!!

   

கிருத்திகாவை முதல் முதல் அவன் சந்தித்தது கீதா – விஜய் திருமணத்தில்!!! தானாக அவனின் மனம் பழைய காட்சிகளை அசைப்போட்டது!

   

🌼🌸❀✿🌷

   

நேரமாகி விட்டதால் விறுவிறுவென்று நடந்து கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்த தியாகு, 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.