(Reading time: 8 - 15 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

“ஓ, அந்த மொத்த குரங்கு ஃபேமிலியும் உங்களுக்கு தெரிஞ்சவங்க போலிருக்கே! அதுங்க பாஷை எல்லாம் கூட உங்களுக்கு தெரியுமா?” என அவனும் விடாமல் அவள் பாணியிலேயே தொடர்ந்தான்!

   

“உங்க கிட்ட பேசுறேனே அதுல இருந்தே தெரியலை!! சரியான ‘ஜெம்’ நீங்க,” என்று சொல்லி விட்டு நிற்காமல் அங்கிருந்து சென்றாள் அவள்!

   

ஜெம்மா???

   

அது என்ன?

   

இந்த கேள்வியுடனே அவளை அன்று முழுவதும் தொலைவில் இருந்து பார்த்து பார்த்து ரசித்தான் தியாகு! சுருக்கமாக சொல்வதானால் சைட் அடித்தான்!

   

அந்த ஒரே நாளில் அவனுள் ஏற்பட்டிருந்த மாற்றம் அவனுக்கே புரியாத புதிராக தான் இருந்தது.

   

கல்யாண ஃபங்க்ஷன் முடிந்தப் போது, மகளை பிரிய வேண்டுமே என்ற வருத்தத்தில் இருந்த கீதாவின் பெற்றோரை வி,ட தியாகுவிற்கு தான் வருத்தம் அதிகமாக இருந்தது!!!! இதற்கு மேல் கிருத்திகாவை நேரில் பார்ப்பது எப்படி, பேசுவது எப்படி என்று அவனுக்கு கவலையாக இருந்தது!

   

கிருத்திகாவின் வீட்டு விலாசத்தை சாரதாவிடம் இருந்தே அவன் பெற்றுக் கொள்ளலாம்! அவள் வேலை செய்யும் ஆஃபீஸ் முகவரியையும் விஜயிடமோ, கீதாவிடமோ பேசி தெரிந்துக் கொள்ளலாம்!

   

ஆனால் ஒரு பெண்ணை அவளுக்கு விருப்பமில்லாத போது அப்படி வீடு, அலுவலகம் என தொடர்வது சரியில்லை என்று அவனுக்கு தோன்றியது. அதனால் கிருத்திகாவிடம் நேராக சென்று மல்லுக்கட்டாமல், விஜயிடம் பொய்யாக ஒரு கதையை சொல்லி அவளை பற்றிய விபரங்களை கேட்டு தெரிந்துக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.