(Reading time: 8 - 15 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

நினைக்கலை,” என்றார் ரங்கராஜன் வருத்தம் இழையோட!

   

ரங்கராஜன் சொன்ன ‘மகள் கல்யாணம்’ எனும் வார்த்தைகளால் தியாகுவினுள் சத்தமில்லாத பூகம்பம் நிகழ்ந்தது! ஆனால் ரங்கராஜனின் முகத்தில் தெரிந்த வருத்தம் அவனின் மனதை சுட, தன் வருத்தத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல்,

   

“தெரிஞ்ச ஃபேமிலின்னு சொல்றீங்க, அப்போ இந்த ஒரு இன்சிடென்ட் வச்சு முடிவுக்கு வராதீங்க அங்கிள். நல்லா விசாரிச்சுப் பாருங்க. இன்னைக்கு அவர் இப்படி நடக்குறதுக்கு வேற காரணம் கூட இருக்கலாம்,” என்றான் பெரியவரை தேற்றும் விதத்தில்.

   

“நானும் அவன் நல்ல ஃபேமிலின்னு தான் நினைச்சுட்டு இருந்தேன்! என்ன ரீசனா இருந்தாலும் இப்படியா கண்ணு மண்ணு தெரியாம குடிப்பான்? நல்ல வேளை, கார் ரிப்பேர் ஆனதால இங்கே வந்தேன், இவனை பார்க்க முடிஞ்சது. ச்சே!  இவனோட அப்பாக்கு இப்படி ஒருத்தனுக்கு என் பொண்ணை கேட்க எப்படி தான் மனசு வந்துச்சோ!”

   

அவர் புலம்பி கொண்டிருக்கும் போதே விஜய் அங்கே வந்தான்.

   

“ஹேய் தியாகு, நீ எங்கே இங்கே!!!” என நண்பனை பார்த்து ஆச்சர்யப்பட்டவன், ரங்கராஜனிடம், “பரவாயில்லையே சித்தப்பா, வெயிட் செய்துட்டு இருந்த நேரம் தியாகுவோட கம்பெனி கிடைச்சிருக்கே உங்களுக்கு,” என்றான் உற்சாகத்துடன்!

   

அவனின் பேச்சை பிரதிபலிக்காது, “கார் ரிப்பேராகி உனக்காக காத்திருக்க நேரம் ரோட்டுல நிக்க வேண்டாம்ன்னு நான் இந்த ஹோட்டல் உள்ளே வந்ததும் நல்லதா போச்சு விஜய்! அந்த கார்த்திக்கோட சுயரூபம் தெரிஞ்சது,” என்றார் ரங்கராஜன் கோபத்துடன்!

   

“எந்த கார்த்திக் சித்தப்பா?”

   

“அதான், அந்த சுதர்ஷனோட மகன்!”

   

“ஓ! அவனா! அவனுக்கு என்ன சித்தப்பா?”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.