(Reading time: 8 - 15 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

கேட்ட அளவில் அவனுக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது, பெருமையாகவும் இருந்தது!

  

அவன் மனதில் இடம் பிடித்திருக்கும் தேவதை சராசரி பெண்களிடம் இருந்து ரொம்பவும் மாறுப்பட்டவள் என்பதை முதல் நாளே அவன் தெரிந்துக் கொண்டிருந்தான்! விஜய் சொன்ன விபரங்கள் அதை அவனுக்கு மீண்டும் ‘கன்ஃபர்ம்’ செய்தது!

  

தியாகுவிற்கு கிருத்திகாவிடம் மிகவும் பிடித்திருந்தது அவளின் தைரியம் தான் என்பதால், விஜய் வழியாக கேள்விப்பட்ட விபரங்கள் அவனின் மனதை சிறிதளவிலும் மாற்றவில்லை! மாறாக அவள் மீதிருந்த மதிப்பை அதிகரிக்க தான் செய்தது!

   

மனதுக்குள் அப்படி காதல் அலைமோதிக் கொண்டு இருந்தாலும், தியாகு கிருத்திகாவின் பின்னே சென்றோ, அலைந்தோ அவளை தொல்லை செய்யவில்லை! மாறாக, விஜய்க்கு தியாகுவின் மனதில் இருக்கும் ஆசை தெரியும் என்பதால், தங்கைக்கு திருமணத்திற்கு வரன் தேட அவனின் பெற்றோர் தொடங்கும் நேரத்தில் விஜய் அதைப் பற்றி கட்டாயம் அவனிடம் சொல்வான் என்ற நம்பிக்கையில் காத்திருந்தான்!

   

அதற்கு நடுவே, விஜய் – கீதாவின் குழந்தையைப் பார்க்க சென்றப் போது எதிர்பாராமல் மீண்டும் கிருத்திகாவை சந்தித்தான்!

   

அவளை கண்ணில் பார்த்ததும் அவனின் காதல் அணுக்கள் கன்னாபின்னாவென்று துள்ளிக் குதித்தது! ஆனால், கிருத்திகாவிற்கு அவனை ஞாபகம் இருக்குமோ என்னவோ என்று யோசித்தப்படி அவன் பேச, அவளுக்கு அவனை நன்றாக ஞாபகம் இருக்கிறது என்பதை அவள் சொன்ன ‘ஹேய் குரங்கு’ பதில் அவனுக்குப் புரிய வைத்தது!

   

எத்தனை முயன்றும் அவனால் மனதில் பொங்கி எழுந்த மகிழ்ச்சியை கட்டுப் படுத்த முடியவில்லை. அந்த சந்தோஷத்தில் தான் கீதாவிடம் அவர்களின் திருமண பேச்சை ஆரம்பிக்க உதவுமாறு கேட்டான்.

   

ஆனால், அவன் அந்த உதவியை கீதாவிடம் கேட்டு ஓரு வாரம் ஓடிச் சென்றப் பிறகும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.