தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 44 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ரங்கராஜன் விஜய் சொல்வதுப் புரியாமல் விழித்தார்!
“யாரை சொல்ற விஜய்?”
“இதோ இவன் தியாகுவை தான் சொல்றேன் சித்தப்பா! இவனுக்கு நம்ம பிரின்சஸ கல்யாணம் செய்துக்கனும்னு பயங்கர ஆசை. இந்த கார்த்திக்கை இப்படி குடிக்க வச்சு இவன் தான் உங்க கிட்ட மாட்டி விட்டானோ என்னவோன்னு கூட எனக்கு சந்தேகமா இருக்கு!”
விஜய் விளையாட்டாக சொன்னாலும் ரங்கராஜன் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார்.
“அப்படி சொல்லாதே விஜய். அந்த கார்த்திக்கை நான் திட்டினப்போ கூட தியாகு அவனுக்காக பேசினார்,” என்று சொல்லி தியாகுவைப் பார்த்து லேசாகப் புன்னகை புரிந்த ரங்கராஜன்,
“விஜய் கிருத்திகா விஷயமா சொல்றது உண்மையா தியாகு?” என்றும் வினவினார்.
தியாகு அவருக்கு உடனே பதில் சொல்லாமல் விஜயைப் பார்த்தான்.
“நான் தான் சொல்றேனே சித்தப்பா, 100% நிஜம்!!! நானே உங்க கிட்ட இவன் விஷயமா பேசலாம்னு இருந்தேன், கீதா தான் என்னை கொஞ்சம் குழப்பி விட்டுட்டா!”
மெல்லிய அதிர்ச்சியுடன் நண்பனைப் பார்த்த தியாகு,
“கீதா குழப்பினாளா? அப்படி என்ன உன் கிட்ட சொன்னா?” என்று வினவினான்.
“உன் அம்மா எதிர்பார்க்குற மருமகளா பிரின்சஸ் இருப்பாளான்னு கேட்டா! எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை தியாகு!”
தியாகு விஜயின் பதிலை கிரகிக்கும் போதே,
“என் மருமகள் எவ்வளவு புத்திசாலி, என்னமா யோசிச்சிருக்கா பாரு! நானும் கூட தியாகு