“ஆமாம் அம்மா!”
“அவளா??”
“ஏன்ம்மா அப்படி கேட்குறீங்க???”
“அவ சரியான சிடுமூஞ்சி ஆச்சேடா தியாகு!”
“ப்ச் அம்மா, ஒருத்தரைப் பத்தி தெரியாம பேசக் கூடாதுன்னு நீங்க தானே எனக்கு சொல்லி கொடுத்தீங்க?”
“தெரியாம என்ன? நான் பார்த்த வரைக்கும் அவ அப்படி தான்!”
“ஆனால் அவங்க வீட்டுல எல்லோர் கிட்டேயும் அவ பாசமா தானேம்மா இருக்கா!”
“அப்படியா என்ன?”
“எனக்கு அவளை ஏன் பிடிச்சதுன்னு சொல்றேன். அதுக்கு அப்புறம் நீங்க சொல்லுங்க,” என்ற தியாகு முதன் முதல் கிருத்திகாவை சந்தித்ததை விவரித்தான்.
“எனக்கு அப்போ உங்க ஞாபகம் தான் அம்மா வந்தது. அதனால தான் அவ மேலே ஒரு இன்டெரெஸ்ட்டும் வந்தது. நீங்களே அப்பப்போ சொல்வீங்க அப்பா அமைதி டைப், நீங்க ஆப்போசிட்ன்னு. அப்புறம், நான் அப்பா மாதிரியேன்னு கூட சொல்வீங்க! அப்போ உங்களை மாதிரி ஒருத்தி வந்தா தானே எனக்கும் ஜோடி சரியா இருக்கும்?”
செவ்வந்தி யோசனையுடன் அமைதியாக இருக்க,
“தியாகுக்கு பிடிச்சிருக்கே அப்புறம் என்ன, மேலே பேசலாமே?” என்றார் குமரேசன்.