(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

நம்ம குழந்தைக்கு சரியான ஜோடியா இருப்பாரான்னு தான் யோசிச்சேன்,” என்றார் ரங்கராஜன்.

   

தியாகு பக்கம் மீண்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு, “இவன் நல்ல ஜோடியா தான் இருப்பான் சித்தப்பா! நம்ம பிரின்சஸ் அடிச்சா தாங்கிக்குற மாதிரி வீராதி வீரன் இவனை தவிர வேற யாரு இருக்க முடியும்? நல்லா அவளுக்கு கூஜா தூக்குவான்,” என்றான் விஜய்!

   

“சும்மா அவரை கிண்டல் செய்யாதே விஜய். மனசுல ஆசை இருந்தாலும் எப்படி அந்த கார்த்திக் பத்தி ஒரே நாள்ல தப்பான முடிவுக்கு வந்திராதீங்கன்னு எனக்கு எடுத்து சொன்னார் பார்த்தீயா, அதுல இருந்தே இவர் குணம் புரியுது!”

   

“எனக்கும் இவனைப் பத்தி நல்லா தெரியும் சித்தப்பா. இல்லைனா பிரின்சஸ் பேரை கூட இவனை சொல்ல விடுவேனா?” என்றான் விஜய்.

   

“அப்புறம் என்ன! நானே உங்க அப்பா கிட்ட பேசி பார்க்கட்டுமா தியாகு?” என ரங்கராஜன் கேட்கவும்,

   

மெல்லிய தயக்கத்துடன், “அங்கிள்... தப்பா எடுத்துக்காதீங்க... எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்களேன்,” என்றான் தியாகு.

   

“என்னடா தியாகு, திடீர்னு டைம் எல்லாம் கேட்குற?” என்றான் விஜய் ஆச்சர்யத்துடன்.

   

“இல்ல விஜய், கீதா அன்னைக்கு என் கிட்டயும் அம்மா பத்தி சொன்னா, நான் அதைப் பத்தி யோசிக்கவே இல்லை. எதுக்கும் நானே அம்மா கிட்ட பேசுறேன். அம்மாவோட சம்மதத்தோட எல்லாம் நடக்கட்டுமே. நீயும் உன் தங்கை கிட்டப் பேசி பாரு. அவங்களுக்கும் என்னை பிடிக்கனுமே!”

   

“அவளுக்கு பிடிச்சவனை அவளா கண்டுப்பிடிச்சு கல்யாணம் நடக்குறதா இருந்தா இன்னும் இருபது வருஷமாவது ஆகும்,” என்று விஜய் சொல்ல,

   

“ஆமாம் தியாகு, அவ பெரிய பிஸ்னஸ் மேக்னட் ஆகிட்டு தான் கல்யாணம் செய்துப்பாளாம்! 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.