(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

வேலை மட்டும் லைஃப் இல்லைன்னு இப்போ அவளுக்கு புரியாமல் இருக்கலாம். அதுக்காக நாங்க அவளை அப்படியே விட்டுற முடியுமா?” என்றார் ரங்கராஜன்.

   

“ஆனாலும் அவங்களுக்கும் பிடிக்கனுமே அங்கிள்,” என்றான் தியாகு!

   

“ப்ரின்சஸ்க்கு பிடிக்காததா நீயே கேட்டாலும் நாங்க யாரும் எதுவும் செய்ய மாட்டோம் தியாகு. அவளும் அவ மனசுக்கு பிடிக்காததை யாருக்காகவும் செய்ய மாட்டா! நாங்க செய்யப் போறது ட்ரிகர் மட்டும் தான்! ஃபைனல் டெசிஷன் பிரின்சஸ் கிட்ட தான் இருக்கு!”

   

“அப்போ சரி! நீங்க அவங்க கிட்ட பேசுங்க, நான் என் அம்மா கிட்ட பேசுறேன்,” என்றான் தியாகு!

   

❀✿❀✿❀✿

   

“என்ன அம்மா அதிசயமா ரெஸ்ட் எடுக்குறீங்க!!! காலையில இருந்து ரொம்ப வேலையா?”

   

நாற்காலியில் ஹாயாக சாய்ந்து அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த செவ்வந்தி, விழிகளை உயர்த்தி மகனைப் பார்த்தாள்.

   

“என்ன தியாகு, ஓவரா செல்லம் கொஞ்சுற? என்ன விஷயம்?”

   

“என்னம்மா நீங்க! நான் உங்களை செல்லம் கொஞ்சாம வேற யார் கொஞ்சுவா,” என்றான் தியாகு!

   

“தியாகு, எனக்கு தெரியாதா உன்னைப் பத்தி! என்ன விஷயம்ன்னு நேரா சொல்லு!”

   

“ஏன்ம்மா வீட்டுக்கு மருமக வந்தா அம்மாக்கு வேலை குறையும்னு சொல்றாங்களே, அதைப் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?”

   

“நான் நினைக்குறது இருக்கட்டும், உனக்கு ஏன் இந்த சந்தேகம் இப்போ வந்தது? அதை முதல்ல சொல்லு!”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.