“இல்லம்மா, எனக்கு என்னவோ அது ரொம்ப தப்பான ஸ்டேட்மென்ட்டா தோணுது. அம்மாக்கு வேலை அதிகமா இருந்தா வீட்டு வேலைக்கு ஆள் வைக்கனும்! அதை விட்டுட்டு கல்யாணமா செய்வாங்க? நீங்களே சொல்லுங்க!”
இப்போது செவ்வந்தி மட்டுமல்லாது, அதுவரை டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த குமரேசனும் கூட தியாகுவைப் பார்த்தார்!
“என்ன இரண்டுப் பேரும் என்னை அப்படி பார்க்குறீங்க?”
“யாருடா அந்த பொண்ணு?” என்றாள் செவ்வந்தி!
முகம் மலர்ந்து மின்ன, “அம்மான்னா அம்மா தான்!! என்ன ஸ்மார்ட் அம்மா நீங்க!” என ஓவராக ‘ஐஸ்’ மழை பொழிந்தான் தியாகு.
“போதும் போதும் ஐஸ் வச்சது, விஷயத்தை சொல்லு! யாரு அந்த வீட்டு வேலையே செய்யாத உன் மனம் கவர்ந்தப் பொண்ணு? நீ லவ் செய்றேன்னு என்னால நம்பவே முடியலையே! சாமியார் போலல சுத்திட்டு இருந்த!!!”
செவ்வந்தி கேட்ட விதத்தில் தியாகுவிடம் பின்ச் பாயிஷ் பாவனை வந்துப் போனது! மெல்ல சிரித்து தன்னை சுதாரித்துக் கொண்டவன்,
“லவ்வுன்னு சொல்ல முடியாதும்மா! பிடிச்சிருக்கு! ஆனால் உங்களுக்கு பிடிச்சா மட்டும் மேலே யோசிக்கலாம்னு நினைக்குறேன்,” என்றான்!
“யாருப்பா அது? யாருன்னு தான் சொல்லேன்,” என்றார் குமரேசன்.
“நம்ம விஜய் இருக்கானே, அவனோட தங்கை...”
“யாரு, அந்த கிருத்திகாவா?” என்றாள் செவ்வந்தி அதிர்ச்சியுடன்!