கேட்டு ப்ரியம்வதா நம்ப முடியாமல் வாய் பிளந்தாள்.
“ஸ்ரீனி!” நின்ற இடத்தில் இருந்தே மொத்த உலகத்திற்கும் கேட்பதுப் போல அலறினாள் ஐஸ்வர்யா. அப்படியே திரும்பி ஓட முயன்றவளை, சக்தி கெட்டியாக பிடித்து நிறுத்தினாள்.
“எங்கே ஓடுறீங்க?”
“நான் ஸ்ரீனி கிட்டப் போகனும்,” கால்களை எம்பி குதித்து சக்தியிடம் இருந்து வெளி வர முயற்சி செய்தாள் ஐஸ்வர்யா.
ஆனால் சக்தியின் பிடி இரும்பு பிடியாக இருந்ததால் அவளால் அசைய முடியவில்லை.
“இரண்டுப் பேரும் ஒன்னா ஜெயில்ல நிறைய நாள் இருக்க போறீங்க, அங்கே போய் பேச வேண்டியதை பேசிக்கோங்க,” என்ற சக்தி, ப்ரியம்வதா பக்கம் பார்த்து, “ப்ரியம்வதா, கெட்டியான கயிறு, லேஸ் போல ஏதாவது இருந்தா எடுத்துக் கொடுங்க,” என்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ாஸ்,” என்றாள் ஒரு வெற்றிப் புன்னகையுடன்.
🌼🌸❀✿🌷
“என்னால நம்பவே முடியலை!!! கல்யாணமானவங்க எப்படி அண்ணன் தங்கைன்னு சொல்லிட்டு சுத்திட்டு இருந்தாங்க? அதும் ஐஸ்வர்யா வேற ராகுல் கூடவே தான சுத்திட்டு இருந்தா?” கலைவாணி நம்ப முடியாமல் புலம்பிக் கொண்டிருந்தாள்.
“பேராசை, பண ஆசை எல்லாத்தையும் செய்ய வைக்கும்,” என சத்யா கலைவாணிக்கு பதில்