வினாயக்குக்கு தெரியாம மயக்க மருந்து கொடுத்து அவரு வித்தியாசமா நடந்துக்குறதா ஒரு மாயை க்ரியேட் செய்தாங்க. ஏற்கனவே சென்னை ப்ளான்க்கு அவங்க தயார் செய்து வச்சிருந்த ட்ரோன் வச்சும் எக்ஸ்ட்ரா பில்ட் அப் கொடுத்தாங்க. சந்தான கிருஷ்ணன் வினாயக் மொபைல்ல இருந்து சந்திரமௌலி கிட்ட பேசி திருவிழா நடக்குற அன்னைக்கு மதியூர் வர சொல்லி இருக்கான். கடைசியா எல்லோரும் திருவிழால இருக்கும் போது வீட்டுல இருந்த ஐஸ்வர்யா டிவி பார்க்குறதா காட்டிக்கிட்டு ரிமோட் வச்சு அவங்க ப்ளானை பக்காவா செய்து முடிச்சா.
அவங்க நினைச்சதுப் போலவே வினாயக் மேல போலீஸ்க்கு சந்தேகம் வந்துச்சு. அந்த சந்தேகம் அதிகமாகி கேஸ் ஸ்ட்ராங் ஆக எல்லா உதவியையும் மறைமுகமா செய்தாங்க. ஃபார் எக்சாம்பிள் அந்த ட்ரோன் நமக்கு கைக்கு கிடைக்குற மாதிரி பார்த்துக்கிட்டாங்க.
...
This story is now available on Chillzee KiMo.
...
!
கலைவாணி கையால் வாயை மூடிக் கொண்டாள். அவள் கண்களில் திகில் இருந்தது. சில நிமிடங்களுக்கு முன் நடந்ததையும், இப்போது கேட்டுக் கொண்டிருப்பதையும் எல்லாம் நம்பக் கூட அவளுக்கு பயமாக இருந்தது!
“சக்தி, நீங்க சொல்றது எல்லாம் நடந்திருக்கலாம்னு தானே சொல்ல முடியும்? இதுக்கு எல்லாம் என்ன சாட்சி இருக்கு? நீங்க எப்படி ஸ்ரீனிவாஸ், ஐஸ்வர்யாவை பின் செய்தீங்க?”