(Reading time: 10 - 20 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

அப்போது தான் அவன் அங்கே இருப்பதை கவனித்த தென்றல்வாணன், “சப் இன்ஸ்பெக்டர் சார், நீங்க இங்கே என்ன செய்துட்டு இருந்தீங்க? குழந்தை பிறந்திருக்குன்னு லீவ் தானே போட்டு இருந்தீங்க?” என்றான்!

   

“அது... சார்.... சும்மா இங்கே வந்தேன்!” அபினவ் அசடு வழிந்து சமாளிக்க முயன்றான்.

   

அவர்களை பேச விட்டு கலைவாணி மகள் பக்கம் கவனத்தை திருப்பினாள்.

   

“அப்போ ப்ரியா, உங்க இரண்டுப் பேருக்கும் நாளைக்கே கல்யாணம் நடக்கனுமா??”

   

ப்ரியம்வதாவும், வினாயக்கும் மீண்டும் ஒருத்தடவை அவர்களுக்குள் பார்த்துக் கொண்டு ஆம் என்று தலையை ஆட்டினார்கள்.

   

“ப்ரியாக்காக இல்லைனாலும் என்னை அம்மான்னு சொன்ன வினாயக்குக்காக கல்யாணம் நடந்திருவோம்!” சிரிப்புடன் சொன்னாள் கலைவாணி. 

   

சட்டென வினாயக், ப்ரியம்வதா முகங்கள் பளிச்சுட்டு மின்னியது!

   

ராகுல் மட்டும் சோகம் அப்பிய முகத்துடன் அமர்ந்திருந்தான்.

   

“ராகுல், தப்பிச்சுட்டேன்னு நினைச்சு சந்தோஷப்படு! ஐஸ்வர்யா நீ வருத்தப்படுற அளவுக்கு ஒன்னும் கிடையாது. இதுவும் கடந்துப் போகுமடா!” கலைவாணி மகனை தட்டிக் கொடுத்துக் கொண்டே பேசினாள்.

   

ராகுலின் முகம் தெளிவாகவில்லை ஆனாலும் தலையை பேருக்கு ஆட்டினான்! 

   

🌼🌸❀✿🌷

   

ஒரு மாதத்திற்குப் பிறகு:

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.