(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

இருக்கிறது என்பது விக்கிராந்திற்கு புரிந்தது. ஆனால் என்ன என்று தெளிவாக புரியாததால், ஆம் என்ற அர்த்தத்தில் தலை அசைத்தான்.

   

ஸ்ரீ’யும் கோகிலாவும் தங்களுக்குள் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்!

   

அதை கவனித்து, “என்ன??” என்றான் விக்கிராந்த் கேள்வியுடன்!

   

“நத்திங் சீரியஸ் விக்கிராந்த் சார்! உங்க பேரு ரொம்ப பாப்புலர் அதான் அந்த விக்கி என்கிற விக்கிராந்த் நீங்க தானான்னு கன்ஃபர்ம் செஞ்சுக்கிட்டேன்,” என்றாள் ஸ்ரீ.

  

அவள் தன்னை கலாட்டா செய்கிறாளா என்ற கேள்வியுடன், “உங்களுக்கு எப்படி என் நிக் நேம் விக்கின்னு தெரியும்??” என்றான்.

   

“அதெல்லாம் உங்க ப்ரியா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க! ஆமா, உங்களுக்கு வேற யார் கூடவோ மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருக்குறதா கேள்விப்பட்டேனே, அப்போ அது என்ன ஆச்சு???”

   

ஸ்ரீ தன் கேள்விக்கு பதில் சொல்லாது வேறு கேள்வி கேட்கவும், கடுப்புடன், “அதை நீங்களும் ப்ரியா கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்கோங்க,” என்றான் விக்கிராந்த்!

   

“கேட்கிறேன், கேட்கிறேன், உங்க ப்ரியா கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்குறேன்! நீங்க இப்போ டென்ஷன் ஆகாம ப்ரியா கிட்ட பேசுங்க. நைஸ் மீட்டிங் யூ இன் பெர்சன். பை,” என கண்கள் மின்ன ஸ்ரீ சொல்லி விட்டு நடக்கவும்,

   

கோகிலாவும், “பை,” என சொல்லி ஸ்ரீ’யுடன் சென்றாள்.

  

அவர்கள் இருவரும் போகும் திசையை கேள்வியுடன் ஒன்றிரண்டு வினாடிகள் பார்த்த விக்கிராந்தின் மனதில் ஸ்ரீ சொன்ன ‘உங்க ப்ரியா’ மட்டும் மீண்டும் ரீங்காரமிட்டது!

   

மனம் லேசாக மீண்டும் பார்வையை ஸ்கூல் பக்கம் திருப்பினான்!

   

ப்ரியாவின் தோழிகளுக்கு அவனை தெரிந்திருக்கிறதே! ப்ரியா அவனை பற்றி சொல்லி 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.