(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

“நமக்கு இருக்குறது ஒரே பையன்ங்க!”

   

“ஆமாம்! தியாகுவோட சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்? நீ மட்டும் அந்த கிருத்திகா மாதிரி ஒரு பொண்ணை கண்டுப்பிடிச்சா கல்யாணம் செய்துக்குறேன்னு அவன் சொல்றானே, அதுல இருந்தே உனக்குப் புரியலையா??? தியாகு நமக்காக இப்படி இறங்கி வரும் போது, நாம விட்டுக் கொடுத்துப் போனா என்ன? நான் விசாரிச்ச வரைக்கும் ரங்கராஜன் குடும்பம் நல்ல குடும்பம் தான்! அந்த பொண்ணை பத்தி தப்பா ஒருத்தர் கூட சொல்லலை. நிறைய பெரிய இடத்து சம்மதம் எல்லாம் கூட அந்த பொண்ணு வேண்டாம்ன்னு சொல்லிட்டாளாம். வேலையில புலின்னு சொல்றாங்க. நல்ல புத்திசாலி! எல்லாத்தையும் விட தியாகுக்கு அவளைப் பிடிச்சிருக்கு. வேற என்ன வேணும் உனக்கு? கல்யாணம் செய்து வாழப் போறது அவங்க. நாம தியாகுவை சார்ந்தும் இல்லை. அப்புறம் உனக்கு என்ன தான் பிரச்சனை???”

   

“பிரச்சனைன்னு இல்லைங்க...”

   

“அப்போ உனக்கும் சம்மதம் தானே?” என்ற குமரேசன் உடனே மகன் பக்கம் பார்த்து பேசினார். 

   

“தியாகு உன் அம்மா சரின்னு சொல்லிட்டா...”

   

“நான் எங்கே சொன்னேன்... நீங்களாவே சொல்லிக்குறீங்க,” என செவ்வந்தி அலுத்துக் கொள்ள,

   

“அம்மா உங்களுக்கு பிடிக்கலைனா மேல பேச வேண்டாம்மா,” என்றான் தியாகு அம்மாவை தேற்றும் எண்ணத்துடன்.

   

“போதும் போதும்! நீ எவ்வளவு நல்லவன்னு எனக்கு தெரியும், நிறுத்து! நானே கிருத்திகா அம்மா அப்பா கிட்டப் பேசுறேன்,” என்றாள் செவ்வந்தி.

   

“ஹையா!!! என் அம்மா தான் பெஸ்ட்!!!!”

   

தியாகு துள்ளிக் குதிக்காத குறையாக மகிழ்ச்சியுடன் அம்மாவை அணைத்துக் கொள்ள, 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.