(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

மகளை கல்யாணம் செய்துக்கப் போறீங்க, நீங்களும் எனக்கு மகன் தான்! நீங்க எப்போ வேணா என்னை வந்து பார்த்துப் பேசலாம்.”

   

“மகன்னு சொல்றீங்க, மரியாதை கொடுத்ததும் பேசுறீங்க???”

   

“நான் மகன்னு நினைக்கலாம், நீ எப்படி நினைக்குறன்னு எனக்கு இப்போ தானேப்பா தெரியும்!”

  

“விஜய் பேச்சு எங்கே இருந்து வந்ததுன்னு இப்போ தான் புரியுது அங்கிள்! அப்புறம்... நான் உங்க கிட்ட பேச வந்தது கீர்த்தி பத்தி!”

   

சுற்றி வளைக்காமல் தியாகு வந்த காரணத்திற்கானப் பேச்சை தொடங்கவும், ரங்கராஜன் முகத்தில் மின்னிய கேள்வியுடன் என்ன என்பதாக அவனைப் பார்த்தார்.

   

“அவங்க ரொம்ப கோபமா இருக்காங்கன்னு விஜய் வழியா கேள்விப் பட்டேன். அவங்க கிட்ட நேரடியா பேசிடலாம்ன்னு பார்க்கிறேன். உங்க கிட்ட கேட்காம பேசுறது சரின்னு படலை...”

   

ரங்கராஜனின் முகத்தில் புன்னகை தோன்றியது.

   

“என் பொண்ணு நேருல, ஃபோன்ல உன் கிட்ட பேசினாளா?”

  

“இல்லை அங்கிள்!”

   

“அவ பேசனும்ன்னு நினைச்சிருந்தா பேச வழியா இல்லை! உன் கம்பெனி பேரு தெரியும், ஒரு கூகிள் சேர்ச் செஞ்சா அட்ரஸ் கிடைக்கப் போகுது! உன் கான்டாக்ட் நம்பரும் கூட அப்படி தான்! அவ பேசனும்னு நினைச்சிருந்தா எப்போவோ தேடி வந்து உன்னையே நேருல பார்த்து திட்டி இருந்திருப்பா! எங்க கிட்டேயும் இப்போ கல்யாணம் வேண்டாம்னு தான் சொல்லிட்டு இருக்கா. இந்த கல்யாணமே வேண்டாம்னு சொல்லலை!”

   

தியாகுவின் முகம் தானாக மலர்ந்தது!

   

“இருந்தாலும் அங்கிள்... இதெல்லாம் உங்க ஊகம் தானே?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.