(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

குமரேசன்,

   

“டேய், என் பொண்டாட்டியை செல்லம் கொஞ்சுறதை நிறுத்து. முதல்ல தனியா ஒரு வீடு கட்டுற வேலையை பாரு,” என்றார்.

   

“தனி வீடா??? ஏன்ப்பா?” தியாகு வார்த்தைகளால் கேட்ட கேள்வி, செவ்வந்தியின் முகத்திலும் தெரிந்தது!

   

“கிருத்திகான்னு இல்லை, எப்போ உனக்கு கல்யாணம் ஆனாலும் தனியா தான் அனுப்புறதுன்னு இருந்தேன். எங்க பக்கத்திலேயே எங்கேயாவது வீடு வாங்கு, இல்லன்னா நல்ல இடமா பார்த்து புது வீடா கட்டு. இதை நான் உனக்காக சொல்லலை. நீ கொஞ்சம் தள்ளி இருந்தா தான் எங்களுக்கு நல்லது!”

   

“அப்பா...” என்ற தியாகு அப்படியே அம்மாவைப் பார்த்தான்.

   

செவ்வந்தி அமைதியாக இருந்தாள். ஆனால் அவள் முகத்தில் கேள்வியோ குழப்பமோ இல்லை!

   

“உன் அம்மா இப்படி அமைதியா இருக்கும் போதே வேலையை ஆரம்பிச்சிடு தியாகு. இந்த சான்ஸை மிஸ் செய்தா அவ்வளவு தான்,” என்றார் குமரேசன் கேலியாக!

   

“இல்லைப்பா... ஒருவேளை கிருத்திகாக்கு என்னை பிடிக்காம போயிட்டா என்ன செய்றது?” என்றான் தியாகு தயக்கத்துடன்!

   

“அது எப்படி பிடிக்காம போகும்! நானும் ரங்கராஜனும் எல்லாம் பேசியாச்சு. ஃபார்மலா பேச்சை ஆரம்பிக்க வேண்டியது தான் பாக்கி,” என சொல்லி குமரேசன் மனைவியைப் பார்க்க,

   

“அம்மா,” என கொஞ்சலாக அழைத்துக் கொண்டே தியாகுவும் செவ்வந்தியைப் பார்த்தான்!

   

“சரி, சரி, கீதாவோட பொண்ணு பர்த்டே பார்ட்டி வருதே, அப்போ நானே பேசுறேன், போதுமா?” என்றாள் செவ்வந்தி!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.