(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 48 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

காலையில் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பி வந்த கிருத்திகா எதிரே வந்த தியாகுவை கவனிக்காமல் அவன் மீது மோதிக் கொண்டாள்.

   

அவள் கீழே விழாமல் அவன் பிடித்து நிறுத்த, அவளின் முகமே அவளுள் ஓடிய எண்ணங்களை எடுத்துச் சொன்னது...

   

இளகிய அவளின் முகமும், அவன் மீதே நிலைத்திருந்த விழிகளும் தியாகுவை என்னவோ செய்தது.

   

சந்தர்பத்தை தவற விடாமல் அவன் அவள் கன்னத்தில் மென்மையாக முத்தம் பதிக்க, மெல்ல நிறம் மாறிய அவள் முகத்தில் வெட்கமும் கொஞ்சமாக எட்டிப் பார்த்தது...

   

அவளிடம் முதல் முறையாக அவன் பார்த்த அந்த வெட்கம் அவனை மயக்கியது.

   

இமைகளை மூடாமல் அவன் அதை ரசித்துக் கொண்டிருக்கும் போதே, சிவ பூஜை கரடியாக அவளின் செல்ஃபோன் ஓசை எழுப்பியது.

   

அவ்வளவு தான், அடித்த வினாடியே அவளின் பாடி லேங்வேஜ் மொத்தமாக மாறிப் போக அவனிடம் இருந்து விலகி நடந்தாள் அவள்.

   

கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தப் போதும், மனதினுள் காதலை ஒளித்து வைத்துக் கொண்டு அவள் நாடகமாடுவது அவனுக்கு தெளிவாகப் புரிந்தது.

   

மனதில் உல்லாசம் பொங்க சின்ன புன்னகையுடன் அவள் கிளம்ப காத்திருந்தான்!

   

ஃபோன் பேசி முடித்து வந்த கிருத்திகா, “ரெடியா?” என்றாள் மொட்டையாக.

   

“ஆல்வேஸ் அட் யுவர் சர்வீஸ் மேடம்,” என்றான் அவன் போலி பவ்யத்துடன்!

   

கிருத்திகா அதை எல்லாம் கவனித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாது அவனின் காரில் ஏறி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.