(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தடவை நீயும் வா... அம்மாக்கு நாம இப்படி இரண்டு ரூம்ல வாழுறோம்னு எல்லாம் தெரியாதே...”

   

“நோ... என்னால வர முடியாது...” சொன்னதற்கு ஏற்ப மறுப்பாக தலையை அசைத்தாள் அவள்!

   

“ப்ளீஸ் கீர்த்தி...”

   

மறுப்பாக தலையை அசைத்துக் கொண்டிருந்தவள், அவனை மீண்டும் அவளின் அந்த வித்தியாசமான பார்வை பார்த்தாள்!

   

அவனின் ‘ப்ளீஸ்’ அவளை கரைத்ததோ என்னவோ...

   

“ஓகே, சரி வரேன்... ஆனால் கொஞ்ச நேரம் தான் அங்கே இருப்பேன்...” என்றாள்.

   

“சரி... நீ எப்போ கிளம்பனும்னு சொல்றீயோ அப்போ கிளம்பிடலாம்...”

   

“அப்போ ஓகே... நான் வரேன்...“

   

மாலையில் சிணுங்கிக் கொண்டே அவனுடன் காரில் வந்த கிருத்திகா, அவன் வீட்டின் முன் காரை நிறுத்திய பின்பும் அசையாமல் இருந்தாள்.

   

“வீடு வந்தாச்சு கீர்த்தி...”

   

“ப்ச்... எனக்கு வர பிடிக்கலை... நான் இங்கேயே இருக்கேன்...” சின்னக் குழந்தையாக பிடிவாதம் பிடித்தாள் அவள்!

   

‘ஹேய், இப்போ இப்படி சொன்னால் எப்படி?”

   

“அதெல்லாம் அப்படி தான்...”

   

“சின்னக் குழந்தை மாதிரி பீகேவ் செய்யாதே கீர்த்தி...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.